அதிமேதகு ஜானாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின்; ‘மைத்திரி பாலனய - நிலைபேறான நாடு’ என்ற கொள்கைகளில் ஒன்றாக, போதைப் பொருள் ஒழிப்புக்கான செயற்பாட்டுக் குழுவை தேசிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டம் அமுலாக்கம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த வேலைத்திட்ட ஆமுலாக்கத்தை இலகுபடுத்தும் நோக்கில் இதற்கான ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி அவர்களின் நேரடியான கண்காணிப்பின் கீழ் நிறுவப்பட்டுள்ளதுடன், மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகள் என்ற அலகுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டு, பின்வரும் பிரதான விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உண்மையில் போதைப் பொருள் என்றால் என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கும் போது, உலக சுகாதார அமைப்பின் (WHO) வரைவிலக்கணம் மிகப்பொருத்தமான ஒன்றாக காணப்படுகின்றது.
அதாவது, போதைப்பொருள் என்பது, ஒரு உயிரி உள்ளெடுக்கும் போது, அதன் நடத்தையின் ஒன்றை அல்லது பலதைப் பாதிக்கக் கூடிய பொருள் போதைப்பொருள் எனப்படும் என அது வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் நமது பிரதேசங்களில் காணப்படும் போதைப் பொருட்களாக, புகையிலையை மைய்யமாகக் கொண்ட வெற்றிலை, பாக்கு, மற்றும் சுண்ணாம்பு சேர்த்த கலவையிலான மற்றும் மாவா போன்ற உண்;ணல் பொருட்களும், பீடி, சிகரட், கஞ்சா, போன்ற புகைத்தல் பொருட்களும், பியர், சாராயம், கசிப்பு, கள்ளு போன்ற அருந்துதல் வடிவிலான பானங்களும், அபின் எனும் இறுகிய பசை போன்ற பொருளும், தூள் வடிவிலான ஹெரோயின் போன்ற பொருட்களும், நமது நாட்டில் இன்று புழக்கத்தில் காணப்படுகின்றன.
இந்தப் போதையைப் பாவிப்பவர்களின் பாவனையின் தன்மையைப் பொறுத்தவரையில், உண்ணல், குடித்தல், நுகர்தல், புகைத்தல் மற்றும் ஊசி மூலமாக உடம்பில் ஏற்றிக் கொள்ளல் என்ற முறைகளில் அதன் பாவனையின் தன்மைகள் காணப்படுகின்றன.
இவ்வாறான போதைப் பாவனையில் இன்று ஈடுபடுகின்றவர்களாக கைவிடப்பட்ட சிறுவர்கள், பெண்கள், கவனிப்பாரற்ற பாடசாலை மாணவர்கள், நெறிபிறழ்வான இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், வேலையற்றவர்கள், குடும்பத்தால் அல்லது சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்கள், குடும்பப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டவர்கள், தாழ்வு மனப்பான்மையுடையவர்கள், கொள்ளை, கொலை, கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற மிக மோசமான ஈனச்செயல்களில் ஈடுபடுபவர்கள், மதச்சார்பற்றவர்கள், வாழ்வில் விரக்தியுற்றவர்கள், உளநிலை பாதிப்படைந்தவர்கள், அரசியல் நடவடிக்கைக்காக அமர்த்தப்படும் கூலியாட்கள் என பரந்த அடிப்படையில் இன்று போதைப்பாவனைக்கு இலக்காகி, அதற்கு அடிமைப்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் சீரழிந்து சின்னாபின்னமாகி காணப்படுபவர்களை அவதானிக்க முடியும்.
இந்தப் போதைப்பொருள் விற்பனையானது இன்று சர்வதேச ரீதியில் ஒரு மாபியாவாக உருவெடுத்துள்ளது. இதனை சந்தைப்படுத்தும் ஊடகங்களாக, இன்று குறுந்திரைப்படங்கள், சினமாப்படங்கள், விளையாட்டு வீரர்களின் அல்லது ஏனைய துறைகளில் உலகளவில் பிரபல்யமடைந்தவர்களது விளம்பரங்கள் காணப்படுகின்றன.
அதேபோன்று, ஒரு சமூகத்தின் இயல்புநிலைக்கு புறம்பாக இருக்க விரும்புதல், நோய்க்காண நிவாரணியாகக் கருதுதல், ஏற்கனவே அடிமையாகியிருத்தல், தூண்டல் காரணிகளை கட்டுப்படுத்த முடியாமல் போதல், அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலை,தாழ்வு மனப்பாங்கு, சுயமுகாமைத்துவத்தில் தோல்விநிலை, குழந்தை மற்றும் பிள்ளைப் பருவங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள், மன அழுத்தங்;கள், ஒரு துயரிலிருந்து விடுபடுவதற்கான உபாயமாகக் கொள்ளல், இலக்குகளை அடைவதில் தோல்வி, மன அழுத்தங்கள் மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் போன்ற உளவியல் காரணங்கள் ஒரு மனிதனின் போதைவஷ்த்துப் பாவனைக்குள் தள்ளிவிடுகின்றன.
குறிப்பாக, ஒரு குடும்பம் போதைப்பாவனை, உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் குடும்பமாகக் காணப்பட்டால் அல்லது குடும்பத்திற்குள் மோதல்கள் மற்றும் வன்முறைகள் நடைபெற்றால், குடும்ப ஆதரவு கிடைக்காமல் போனால், குடும்பத்திலிருந்து ஒதுங்கி விரக்தியுற்று வாழும் நிலை ஏற்பட்டால், குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதன் சுயகௌரவம் சிதைந்து போனால், அந்தக் குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் மிக இலகுவான முறையில் போதைக்கு பழக்கப்பட்டுவிடுவர்.
அதேபோன்று, சமவயதினர்களின் அழுத்தம், சமூகத்திலுள்ள போதைக்கு அடிமைப்பட்டவர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், போதை வஸ்த்து இலகுவாகக் கிடைத்தல், நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களின் பலவீனம், சட்டம் மற்றும் நீதியை அமுல்படுத்துபவர்களின் ஆதரவு, ஒரு சில அரசியல்வாதிகளினது தலையீடும் ஈடுபாடும், தேர்தல் காலங்களில் எதிரணியினரை எதிர்கொள்வதற்காக பிழையான வழிமுறையில் செயற்பட ஊக்குவித்தல், சந்தைப்படுத்தல் ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஒரு மனிதனை அண்டியுள்ள சூழலில் போதைவஷ்த்து உற்பத்தி, கடத்தல், விற்பனை மற்றும் பாவனை சர்வசாதாரனமாகப் புழக்கத்திலிருத்தல் மற்றும் சட்டவிரோதமான காரியம் ஒன்றை சாதிப்பதற்காக போதையூட்டல், அதனை சாதித்ததற்கான பரிசாக போதைப்பொருள் வழங்கல் மற்றும் போதைப்பாவனையாளர்கள் ஒரு குழுவாக செயற்படல் போன்ற சமூகச் சு+ழல் காரணிகள் ஒரு மனிதன் போதைக்குப் பழக்கப்படுவதற்கு பங்களிக்கின்றன.
மேலும், சமூகக் கட்டமைப்பு சிதைவடைந்து சின்னாபின்னமான நிலைமை, நவீன மாற்றங்களுக்கு துரிதமாக உள்ளாகின்ற சமூக அமைப்பு முறை, சமூகப் பொறுப்புக்களை உதாசீனம் செய்யும் போக்குள்ள நபர்கள் அதிகமாகக் காணப்படல் என்பன போன்ற நிலைமைகள் காணப்படும் சமூகத்தில் போதைப்பாவனை அதிகமாக காணப்படும் நிலைமை உருவாகும்.
உடலைப் பொறுத்தவரையில், உணவு உண்பதில் ஏற்ப்படும் சீர்கேட்டினால் போஷனைக்குறைபாடு, இரப்பையில் புண் மற்றும் புற்றுக்கள் தோன்றுதல், சதையி அழற்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைல், தொற்றா நோய்களின் பீடிப்புக்குள்ளாதல், ஈரல் அழுகிப்போதல், உடல் நடுக்கம், அதிகுருதி அமுக்கமும் இதய நோயும் உருவாதல், மூளை மற்றும் நரம்பு மண்டலப்பாதிப்பும் செயலிழப்பும், பாரிச வாதம், பாலியல் பலவீனம் ஏற்ப்படல் போன்ற மிக மோசமான பாதிப்புக்கள் உருவாகும்.
அதேபோன்று, அம்மனிதன் உளரீதியில் கவலை, அச்சம், பீதி, பதகளிப்பு, விரக்தி, துக்கம், மறதி அதிகரிப்பு, ஆளுமைக்குறைபாடு, தற்கொலை என்பன போன்ற தாக்கங்களைக் கொண்டிருப்பர்.
போதைப்பாவனையாளர்களையும் அவரது குடும்பத்தவர்களையும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கின்ற நிலைமைகளே எப்போதும் காணப்படும். இதனால் உரியவரின் குடும்பம் மற்றும் அவரது சந்ததிகள் அந்நியமான நிலையை அடைவார்கள்.
போதைக்கு அடிமையானவர்கள் காலப்போக்கில் பல சுகாதாரன ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடும். இவர்களை நமது நாட்டில் மருத்துவ மனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முற்படும் போதும், போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்து நல்லதொரு நிலைமைக்கு கொண்டுவர முயற்சிக்கும் போதும் தேசத்தின் பொது நிதியானது வீணாக விரையமாகின்றது.
போதைக்கு அடிமையான நபரினால் காலப்போக்கில் இத்தேசம் எதிர்பார்க்கின்ற மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்புக்களை வழங்கமுடியாமல் போவதுடன், அவர் இத்தேசத்திற்கே ஒரு சுமையான காரணியாக மாறுகின்ற துயரமான நிலைமை உருவாகும்.
1) விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்:
கிராமிய மட்டங்களில் மக்களை இதுதொடர்பில் விழிப்படையச்செய்து வலுவு+ட்டுவதற்காக சிறந்த முறையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
சமூகத்திலுள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர் யுவதிகள், வயதானவர்கள் மற்றும் சமூக நிறுவனங்களை நடத்தும் தலைவர்கள், சிவில் தலைமைகள் என பல மட்டங்களிலும் இவ்விழிப்புணர்வு சார்ந்த நிகழ்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
குறிப்பாக இதன்போது ஒவ்வொரு மட்டத்தினரதும் வயது, தராதரம், அவர்களது கொள்திறன் என்பன கவனத்திற்கொள்ளப்படுகின்ற வகையில் இவ்வேலைத்திட்டங்கள் தனினத்தனியாக வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும்.
மேலும், இவ்விழ்pப்புணர்வு வேலைத்திட்டங்களில் துண்டுப்பிரசுரம், கருத்தரங்குகள், வீதி நாடகங்கள், போட்டிகள், குறுந்திரைப்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் பதாகைகள் போன்ற வேலைத்திட்டங்களை உள்வாங்கலாம்.
அதேபோன்று, விழிப்புணர்வு வேலைத்திட்டங்களில் சமயம் சார்ந்த கருத்துரைகள், மருத்துவ ரீதியிலான விளக்கங்கள், சட்டத்துறை சார்ந்த விளக்கங்கள் மற்றும் உளவியல் விளக்கங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கிய விடயங்களை தெளிவாக வழங்கக் கூடிய வகையிலான துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு, நன்கு வடிவமைக்கப்பட்டு விழிப்பணர்வு கொடுக்கப்படல் வேண்டும்.
2) போதைத் தடுப்பிற்கான குழுக்களை அமைத்தல்:
போதைப்பாவனை, கடத்தல், விற்பனை, சட்ட விரோத உற்பத்தி போன்றனவற்றை தடுப்பதற்காக தன்னார்வக் குழுக்கள் இயங்குதல் வேண்டும். இவ்வாறான குழுக்கள் போதை விற்பனையாளர்களின் விளம்பரங்கள், உத்திகள், அதற்காக ஒத்துழைப்பவர்கள் விடயத்தில் விளிப்படைவதுடன், அவற்றை மக்கள் பங்கேற்ப்புடன் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அமுல்படுத்துதல் வேண்டும்.
மேலும், போதைத்தடுப்பிற்காக அரசாங்கத்தின் மூலமாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை உத்தியோகத்தர்கள், சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் இதுதொடர்பில் இயங்கும் அரசசார்பற்ற அமைப்புக்கள் என்பனவற்றுடன் இணைந்து பணியாற்றுதல் வேண்டும்.
இவ்வாறான குழுக்களை ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்கள் பிரிவு மட்டத்தில் நிறுவி இந்த வேலைத்திட்டங்களை அமுல்படுத்துமாறும் அதுதொடர்பாக மாதாந்தம் உரிய பிரிவுகளில் கூடி தீர்மானங்கள் எடுக்குமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
3) போதைப்பாவனைக்குள்ளானவர்களை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்:
சமூகத்தில் போதைப்பாவனைக்கு பழக்கப்பட்டவர்களை அல்லது அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக, முதலில் அவர்களை அடையாளங்கண்டு கொள்ள வேண்டும். பின்னர் அவர்களை அணுகி அவர்களை அதிலிருந்து அவர்களை விடுபடவைக்கும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமான முறையில் தொடராக உறவாடல் செய்யவேண்டும். பின்னர் அவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான சம்மதத்தை மனப்பூர்வமாக வெளிப்படுத்தினால், அவர்களது பாவனையின் தன்மையைப் பொறுத்து, அவர்களைப் பின்வரும் வழிமுறைகளை நோக்கி வழிப்படுத்தல் வேண்டும்.
போதைக்கு அடிமைப்பட்டவர்கள் அதிலிருந்து உடனடியாக விடுபட முயற்சிக்கும் பொழுது, வைத்தியரின் ஆலோசனை மற்றும் அவரது உதவியுடனேயே விடுபட முயற்சிக்க வேண்டும். ஏனெனில், சில வேளைகளில் அவரில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற உடனடியான பாதிப்புக்களிலிருந்;து பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோன்று, போதைக்கு அடிமைப்பட்டவர்கள்; தங்களது விலகிக்கொள்ளல் என்ற தீர்மானத்தினை உறுதியாக்கிக் கொள்வதற்க்கும், மேலும் அவ்வாறானவர்கள் உளரீதியிலும் பாதிப்பைக்கொண்டிருப்பார்கள். அதன்காரணமாக உளவளத்துணையாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதும் அவர்களது எதிர்கால நலனுக்கு இன்றியமையாததொன்றாகும். அத்துடன், குறித்த நபரால் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவருக்கும் குடும்பத்திற்கும் இடையில் விரிசலான நிலைமைகள் உருவாகியிருக்கும். இவ்வாறான நிலைமைகளை ஆரோக்கியமான வழிகளில் கையாழ உளவளத்துயைhளரின் உதவி அவசியமானதாகும்.
போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீட்சிபெற்றவரின் அப்போதைய துன்பியல் நிகழ்வுகள், மற்றும் அனுபவங்கள் மற்றும் அதிலிருந்து அவர் மீட்சிபெற அவர் கையாண்ட உபாயங்கள் என்பனவற்றை, போதைக்கு அடிமைப்பட்டு, அதிலிருந்து விடுபட விரும்புகின்ற நபர்கள் கூட்டாக இணைந்து கலந்துரையாடி அவருடன் பகிர்ந்து கொள்வதுதான் குழச் சிகிச்சை வழங்களாகும்.
இதில் போதையை விட்ட நபரும் அவரது குடும்ப அங்கத்தவர்களும் தங்களது கடந்தகால அனுபவங்களை கண்ணீர் விட்டழுது பகிர்ந்துகொள்வர். இதனை ஒரு உளவளத்துணையாளர் அல்லது உள மருத்துவர் மிக திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்குபடுத்தி வழிப்படுத்துதல் வேண்டும். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் விடயங்கள் அனைத்தும் மிக இரகசியமான முறையில் பேணப்படல் வேண்டும்.
போதைக்கு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்பதற்காக புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்காக அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசாங்கம் நேரடியாக நடாத்துகின்ற புனர்வாழ்வு நிலையங்களும் உண்டு.
இதில் இவர்கள் முழுநாட்களாக தங்கவைக்கப்பட்டு வைத்திய சிகிச்சை, உளவளத்துணை நடவடிக்கைகள், மற்றும் அவர்களது வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் அவர்களது வாழ்வை மீள ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான பயிற்சிகள் போன்றவற்றிற்கு உட்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறான புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் போதையிலிருந்து விடுபடுவதற்கான மனநிலை, வாழ்க்கைத்திறன்கள், மற்றும் பொதுவான அவசியமான அறிவு, திறன், மனப்பாங்கு மாற்றங்களைப் முறையாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப வாழ்வுடனும் சமூகத்துடனும் இணைக்கப்படுவர்.
- தமது அதிகாரப்பிரதேசத்துக்குட்பட்ட சமூகத்தை போதை ,மது பாவனைக்கான சந்தர்ப்பத்தை குறைத்தல், போதை ஒழிப்புத் தொடர்பாக சமூகத்தை வலுவூட்டல்.
- அதிகாரப்பிரதேசத்துக்குள் போதைப் பொருள் உற்பத்தி, விற்பனை, கடத்தல், பாவனையை ஒழித்தல்.
- அதிகாரப்பிரதேசத்துக்குள் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்தல்.
உண்மையில் போதைப் பொருள் என்றால் என்ன என்பது தொடர்பாக நாம் பார்க்கும் போது, உலக சுகாதார அமைப்பின் (WHO) வரைவிலக்கணம் மிகப்பொருத்தமான ஒன்றாக காணப்படுகின்றது.
அதாவது, போதைப்பொருள் என்பது, ஒரு உயிரி உள்ளெடுக்கும் போது, அதன் நடத்தையின் ஒன்றை அல்லது பலதைப் பாதிக்கக் கூடிய பொருள் போதைப்பொருள் எனப்படும் என அது வரைவிலக்கணப்படுத்தியுள்ளது.
தற்போதைய நிலையில் நமது பிரதேசங்களில் காணப்படும் போதைப் பொருட்களாக, புகையிலையை மைய்யமாகக் கொண்ட வெற்றிலை, பாக்கு, மற்றும் சுண்ணாம்பு சேர்த்த கலவையிலான மற்றும் மாவா போன்ற உண்;ணல் பொருட்களும், பீடி, சிகரட், கஞ்சா, போன்ற புகைத்தல் பொருட்களும், பியர், சாராயம், கசிப்பு, கள்ளு போன்ற அருந்துதல் வடிவிலான பானங்களும், அபின் எனும் இறுகிய பசை போன்ற பொருளும், தூள் வடிவிலான ஹெரோயின் போன்ற பொருட்களும், நமது நாட்டில் இன்று புழக்கத்தில் காணப்படுகின்றன.
இந்தப் போதையைப் பாவிப்பவர்களின் பாவனையின் தன்மையைப் பொறுத்தவரையில், உண்ணல், குடித்தல், நுகர்தல், புகைத்தல் மற்றும் ஊசி மூலமாக உடம்பில் ஏற்றிக் கொள்ளல் என்ற முறைகளில் அதன் பாவனையின் தன்மைகள் காணப்படுகின்றன.
இவ்வாறான போதைப் பாவனையில் இன்று ஈடுபடுகின்றவர்களாக கைவிடப்பட்ட சிறுவர்கள், பெண்கள், கவனிப்பாரற்ற பாடசாலை மாணவர்கள், நெறிபிறழ்வான இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள், வேலையற்றவர்கள், குடும்பத்தால் அல்லது சமூகத்தினால் புறக்கணிக்கப்பட்டவர்கள், குடும்பப் பிரச்சினையினால் பாதிக்கப்பட்டவர்கள், தாழ்வு மனப்பான்மையுடையவர்கள், கொள்ளை, கொலை, கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறவு போன்ற மிக மோசமான ஈனச்செயல்களில் ஈடுபடுபவர்கள், மதச்சார்பற்றவர்கள், வாழ்வில் விரக்தியுற்றவர்கள், உளநிலை பாதிப்படைந்தவர்கள், அரசியல் நடவடிக்கைக்காக அமர்த்தப்படும் கூலியாட்கள் என பரந்த அடிப்படையில் இன்று போதைப்பாவனைக்கு இலக்காகி, அதற்கு அடிமைப்பட்டு, அதிலிருந்து மீள முடியாமல் சீரழிந்து சின்னாபின்னமாகி காணப்படுபவர்களை அவதானிக்க முடியும்.
இந்தப் போதைப்பொருள் விற்பனையானது இன்று சர்வதேச ரீதியில் ஒரு மாபியாவாக உருவெடுத்துள்ளது. இதனை சந்தைப்படுத்தும் ஊடகங்களாக, இன்று குறுந்திரைப்படங்கள், சினமாப்படங்கள், விளையாட்டு வீரர்களின் அல்லது ஏனைய துறைகளில் உலகளவில் பிரபல்யமடைந்தவர்களது விளம்பரங்கள் காணப்படுகின்றன.
போதைப் பாவனையில் ஈடுபடுவதற்கான காரணங்கள்
போதைவஷ்த்துப் பாவனைக்கு உள்ளாகின்றவர்களை ஆராய்ந்தபோது, அவர்கள் ஏன் அவ்வாறான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என அவதானித்தால், பின்வரும் காரணங்களில் ஏதாவது ஒரு நிலைமை அவர்களின் அப்பாவனைக்கு காரணமாக அமைந்துள்ளது என்பதை உணர்ந்துகொள்ள முடியும்.அகவயமான காரணங்கள்: உயிரியல் காரணங்கள், உளவியல் காரணங்கள்
உயிரியல் காரணங்களைப் பொறுத்தவரையில், ஒரு மனிதனின் பரம்பரை இயல்புகள் மற்றும் அவரது இயல்பூக்கப் பண்புகள், ஏற்கனவே ஒரு வஷ்த்துவிற்கு அடிமைப்பட்ட நிலையில், அதிலிருந்து பின்வாங்குவதனால் ஏற்படும் விளைவுகளைத்தடுப்பதற்காக பாவித்தல் போன்ற காரணிகள் ஒரு மனிதனை போதைப்பாவனைக்கு இட்டுச்செல்கின்றன.அதேபோன்று, ஒரு சமூகத்தின் இயல்புநிலைக்கு புறம்பாக இருக்க விரும்புதல், நோய்க்காண நிவாரணியாகக் கருதுதல், ஏற்கனவே அடிமையாகியிருத்தல், தூண்டல் காரணிகளை கட்டுப்படுத்த முடியாமல் போதல், அதீத உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நிலை,தாழ்வு மனப்பாங்கு, சுயமுகாமைத்துவத்தில் தோல்விநிலை, குழந்தை மற்றும் பிள்ளைப் பருவங்களில் ஏற்பட்ட பாதிப்புக்கள், மன அழுத்தங்;கள், ஒரு துயரிலிருந்து விடுபடுவதற்கான உபாயமாகக் கொள்ளல், இலக்குகளை அடைவதில் தோல்வி, மன அழுத்தங்கள் மற்றும் உளவியல் ரீதியிலான தாக்கங்கள் போன்ற உளவியல் காரணங்கள் ஒரு மனிதனின் போதைவஷ்த்துப் பாவனைக்குள் தள்ளிவிடுகின்றன.
புறவயமான காரணங்கள்: குடும்பக் காரணங்கள், சமூகச் சு+ழல் காரணங்கள்
ஒரு மனிதனின் குடும்பத்திலுள்ள தாய், தகப்பன் அல்லது ஒரு அங்கத்தவர் போதைப்பாவனைக்கு அடிமைப்பட்டவராக இருந்தால், அதிலுள்ள ஏனைய அங்கத்தவர்களும் அவரைப் பின்பற்றி, அவரது அனுபவங்களைப் பெற்று அவ்வாறான நிலைக்குப் பழக்கப்படுகின்ற நிலைமையைக் காணலாம்.குறிப்பாக, ஒரு குடும்பம் போதைப்பாவனை, உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபடும் குடும்பமாகக் காணப்பட்டால் அல்லது குடும்பத்திற்குள் மோதல்கள் மற்றும் வன்முறைகள் நடைபெற்றால், குடும்ப ஆதரவு கிடைக்காமல் போனால், குடும்பத்திலிருந்து ஒதுங்கி விரக்தியுற்று வாழும் நிலை ஏற்பட்டால், குடும்பக் கட்டமைப்பு மற்றும் அதன் சுயகௌரவம் சிதைந்து போனால், அந்தக் குடும்பத்திலுள்ள அங்கத்தவர்கள் மிக இலகுவான முறையில் போதைக்கு பழக்கப்பட்டுவிடுவர்.
அதேபோன்று, சமவயதினர்களின் அழுத்தம், சமூகத்திலுள்ள போதைக்கு அடிமைப்பட்டவர்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுதல், போதை வஸ்த்து இலகுவாகக் கிடைத்தல், நாட்டில் அமுலிலுள்ள சட்டங்களின் பலவீனம், சட்டம் மற்றும் நீதியை அமுல்படுத்துபவர்களின் ஆதரவு, ஒரு சில அரசியல்வாதிகளினது தலையீடும் ஈடுபாடும், தேர்தல் காலங்களில் எதிரணியினரை எதிர்கொள்வதற்காக பிழையான வழிமுறையில் செயற்பட ஊக்குவித்தல், சந்தைப்படுத்தல் ஊடகங்களின் தாக்கம் மற்றும் ஒரு மனிதனை அண்டியுள்ள சூழலில் போதைவஷ்த்து உற்பத்தி, கடத்தல், விற்பனை மற்றும் பாவனை சர்வசாதாரனமாகப் புழக்கத்திலிருத்தல் மற்றும் சட்டவிரோதமான காரியம் ஒன்றை சாதிப்பதற்காக போதையூட்டல், அதனை சாதித்ததற்கான பரிசாக போதைப்பொருள் வழங்கல் மற்றும் போதைப்பாவனையாளர்கள் ஒரு குழுவாக செயற்படல் போன்ற சமூகச் சு+ழல் காரணிகள் ஒரு மனிதன் போதைக்குப் பழக்கப்படுவதற்கு பங்களிக்கின்றன.
மேலும், சமூகக் கட்டமைப்பு சிதைவடைந்து சின்னாபின்னமான நிலைமை, நவீன மாற்றங்களுக்கு துரிதமாக உள்ளாகின்ற சமூக அமைப்பு முறை, சமூகப் பொறுப்புக்களை உதாசீனம் செய்யும் போக்குள்ள நபர்கள் அதிகமாகக் காணப்படல் என்பன போன்ற நிலைமைகள் காணப்படும் சமூகத்தில் போதைப்பாவனை அதிகமாக காணப்படும் நிலைமை உருவாகும்.
போதை வஷ்த்துப் பாவனைக்கு அடிமைப்பட்டவர்களில் ஏற்ப்படும் பாதிப்புக்கள்
ஒரு மனிதன் போதைவஷ்த்;துவிற்கு பழக்கப்படும் போது அல்லது அடிமைப்படும் போது அவரில் ஏற்படும் தாக்கங்களை தனிப்பட்ட, குடும்ப, சமூக மற்றும் தேசப் பாதிப்புக்கள் என்ற ரீதியில் ஆராயமுடியும்.தனிப்பட்ட பாதிப்புக்கள்:
ஒரு நபர் போதைவஷ்த்துவிற்கு அடிமையானால், அவரின் உடல் மற்றும் உளம் என்பன பாதின்றன.உடலைப் பொறுத்தவரையில், உணவு உண்பதில் ஏற்ப்படும் சீர்கேட்டினால் போஷனைக்குறைபாடு, இரப்பையில் புண் மற்றும் புற்றுக்கள் தோன்றுதல், சதையி அழற்சி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைல், தொற்றா நோய்களின் பீடிப்புக்குள்ளாதல், ஈரல் அழுகிப்போதல், உடல் நடுக்கம், அதிகுருதி அமுக்கமும் இதய நோயும் உருவாதல், மூளை மற்றும் நரம்பு மண்டலப்பாதிப்பும் செயலிழப்பும், பாரிச வாதம், பாலியல் பலவீனம் ஏற்ப்படல் போன்ற மிக மோசமான பாதிப்புக்கள் உருவாகும்.
அதேபோன்று, அம்மனிதன் உளரீதியில் கவலை, அச்சம், பீதி, பதகளிப்பு, விரக்தி, துக்கம், மறதி அதிகரிப்பு, ஆளுமைக்குறைபாடு, தற்கொலை என்பன போன்ற தாக்கங்களைக் கொண்டிருப்பர்.
குடும்பத்திலேற்படும் பாதிப்புக்கள்:
போதைக்கு அடிமையான நபருடைய குடும்பத்தைப் பொறுத்தவரையில், அதில் பல பாதிப்புக்கள் ஏற்படும். குறிப்பாக குடும்பத்தில் முரண்பாடு மற்றும் வன்முறை வெடித்தல், கணவன் மனைவிக்கு இடையில் சந்தேகம் வலுப்பெறல், மணமுறிவு ஏற்படல், பிள்ளைகளின் உளம் பாதிப்படைதல், அவர்களது கல்வி, அந்தஷ்த்து மற்றும் தன்மானம் என்பன பாதிப்படைதல், சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாதல், குடும்பத்தின் பொருளாதாரம் படுபாதாளத்திற்கு சென்று கடன்சுமை அதிகரித்தல், குடும்பத்தின் சுயகௌரவம் அமைதி என்பன கெட்டுப்போதல், வீட்டுச் சு+ழல் அலங்கோலமடைதல், சொத்துக்கள் பாதிப்படைதல், வெளியாரின் தலையீடு அதிகரித்தல், அங்கத்தவர்கள் சிதறிச்செல்லும் நிலை உருவாதல் போன்ற துன்பியல் நிகழ்வுகள் ஏற்படும்.சமூகப் பாதிப்புக்கள்:
போதைக்கு அடிமையானவர்களை அவர் சார்ந்துள்ள சமூகம் ஒரு போதும் மதிப்பதோ, கௌரவப்படுத்துவதோ கிடையாது. சமூகம் அவரை சமூகம்சார்ந்த நிகழ்வுகளில் பங்குகொள்வதற்கு அனுமதிக்காது, அதேபோன்று, அவரது சந்தோசகரமான அல்லது துயரமான நிகழ்வுகளில் பங்குகொள்வதற்கும் விரும்பாது.போதைப்பாவனையாளர்களையும் அவரது குடும்பத்தவர்களையும் சமூகத்திலிருந்து ஒதுக்கிவைக்கின்ற நிலைமைகளே எப்போதும் காணப்படும். இதனால் உரியவரின் குடும்பம் மற்றும் அவரது சந்ததிகள் அந்நியமான நிலையை அடைவார்கள்.
தேசத்திலேற்படும் பாதிப்புக்கள்:
சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், கடத்தல்காரர்கள் ஆகியோர்களை சட்டத்தால் தண்டிக்க முற்படும்போது அவர்களை சிறைச்சாலையில் வைத்துப் பராமரிப்பதற்கு நாட்டின் நிதியானது செலவாகின்றது.போதைக்கு அடிமையானவர்கள் காலப்போக்கில் பல சுகாதாரன ரீதியான பிரச்சினைகளுக்கு உள்ளாக நேரிடும். இவர்களை நமது நாட்டில் மருத்துவ மனைகளில் வைத்து சிகிச்சை அளிக்க முற்படும் போதும், போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளித்து நல்லதொரு நிலைமைக்கு கொண்டுவர முயற்சிக்கும் போதும் தேசத்தின் பொது நிதியானது வீணாக விரையமாகின்றது.
போதைக்கு அடிமையான நபரினால் காலப்போக்கில் இத்தேசம் எதிர்பார்க்கின்ற மொத்த தேசிய உற்பத்திக்கான பங்களிப்புக்களை வழங்கமுடியாமல் போவதுடன், அவர் இத்தேசத்திற்கே ஒரு சுமையான காரணியாக மாறுகின்ற துயரமான நிலைமை உருவாகும்.
போதைப் பொருள் பாவனையைத் தடுப்பதற்கான வழிமுறைகள்
போதைப் பொருள் உற்பத்தி, விற்பனை, கடத்தல் மற்றும் பானையை இல்லாமல் செய்வதற்காக அல்லது குறைப்பதற்காக பின்வரும் வழிமுறைகளில் நடவடிக்கைகள் அமுலாக்கம் செய்யப்படல் வேண்டும்.1) விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்தல்:
கிராமிய மட்டங்களில் மக்களை இதுதொடர்பில் விழிப்படையச்செய்து வலுவு+ட்டுவதற்காக சிறந்த முறையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
சமூகத்திலுள்ள சிறுவர்கள், மாணவர்கள், இளைஞர் யுவதிகள், வயதானவர்கள் மற்றும் சமூக நிறுவனங்களை நடத்தும் தலைவர்கள், சிவில் தலைமைகள் என பல மட்டங்களிலும் இவ்விழிப்புணர்வு சார்ந்த நிகழ்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
குறிப்பாக இதன்போது ஒவ்வொரு மட்டத்தினரதும் வயது, தராதரம், அவர்களது கொள்திறன் என்பன கவனத்திற்கொள்ளப்படுகின்ற வகையில் இவ்வேலைத்திட்டங்கள் தனினத்தனியாக வடிவமைக்கப்பட்டு முன்னெடுக்கப்படல் வேண்டும்.
மேலும், இவ்விழ்pப்புணர்வு வேலைத்திட்டங்களில் துண்டுப்பிரசுரம், கருத்தரங்குகள், வீதி நாடகங்கள், போட்டிகள், குறுந்திரைப்படங்கள் மற்றும் காட்சிப்படுத்தல் பதாகைகள் போன்ற வேலைத்திட்டங்களை உள்வாங்கலாம்.
அதேபோன்று, விழிப்புணர்வு வேலைத்திட்டங்களில் சமயம் சார்ந்த கருத்துரைகள், மருத்துவ ரீதியிலான விளக்கங்கள், சட்டத்துறை சார்ந்த விளக்கங்கள் மற்றும் உளவியல் விளக்கங்கள் ஆகியனவற்றை உள்ளடக்கிய விடயங்களை தெளிவாக வழங்கக் கூடிய வகையிலான துறைசார்ந்தவர்கள் அழைக்கப்பட்டு, நன்கு வடிவமைக்கப்பட்டு விழிப்பணர்வு கொடுக்கப்படல் வேண்டும்.
2) போதைத் தடுப்பிற்கான குழுக்களை அமைத்தல்:
போதைப்பாவனை, கடத்தல், விற்பனை, சட்ட விரோத உற்பத்தி போன்றனவற்றை தடுப்பதற்காக தன்னார்வக் குழுக்கள் இயங்குதல் வேண்டும். இவ்வாறான குழுக்கள் போதை விற்பனையாளர்களின் விளம்பரங்கள், உத்திகள், அதற்காக ஒத்துழைப்பவர்கள் விடயத்தில் விளிப்படைவதுடன், அவற்றை மக்கள் பங்கேற்ப்புடன் தடுப்பதற்கான திட்டங்களை வகுத்து அமுல்படுத்துதல் வேண்டும்.
மேலும், போதைத்தடுப்பிற்காக அரசாங்கத்தின் மூலமாக அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள பொலிஸ், மதுவரித்திணைக்கள உத்தியோகத்தர்கள், அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை உத்தியோகத்தர்கள், சமுதாய சீர்திருத்த திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் இதுதொடர்பில் இயங்கும் அரசசார்பற்ற அமைப்புக்கள் என்பனவற்றுடன் இணைந்து பணியாற்றுதல் வேண்டும்.
இவ்வாறான குழுக்களை ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர்கள் பிரிவு மட்டத்தில் நிறுவி இந்த வேலைத்திட்டங்களை அமுல்படுத்துமாறும் அதுதொடர்பாக மாதாந்தம் உரிய பிரிவுகளில் கூடி தீர்மானங்கள் எடுக்குமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.
3) போதைப்பாவனைக்குள்ளானவர்களை மீட்டெடுக்கும் வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்:
சமூகத்தில் போதைப்பாவனைக்கு பழக்கப்பட்டவர்களை அல்லது அடிமையானவர்களை அதிலிருந்து விடுவிப்பதற்காக, முதலில் அவர்களை அடையாளங்கண்டு கொள்ள வேண்டும். பின்னர் அவர்களை அணுகி அவர்களை அதிலிருந்து அவர்களை விடுபடவைக்கும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமான முறையில் தொடராக உறவாடல் செய்யவேண்டும். பின்னர் அவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கான சம்மதத்தை மனப்பூர்வமாக வெளிப்படுத்தினால், அவர்களது பாவனையின் தன்மையைப் பொறுத்து, அவர்களைப் பின்வரும் வழிமுறைகளை நோக்கி வழிப்படுத்தல் வேண்டும்.
1. மருத்துவ சிகிச்சையும் உளவளத்துணையும் வழங்கல்:
போதைக்கு அடிமைப்பட்டவர்கள் அதிலிருந்து உடனடியாக விடுபட முயற்சிக்கும் பொழுது, வைத்தியரின் ஆலோசனை மற்றும் அவரது உதவியுடனேயே விடுபட முயற்சிக்க வேண்டும். ஏனெனில், சில வேளைகளில் அவரில் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற உடனடியான பாதிப்புக்களிலிருந்;து பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியும்.
அதேபோன்று, போதைக்கு அடிமைப்பட்டவர்கள்; தங்களது விலகிக்கொள்ளல் என்ற தீர்மானத்தினை உறுதியாக்கிக் கொள்வதற்க்கும், மேலும் அவ்வாறானவர்கள் உளரீதியிலும் பாதிப்பைக்கொண்டிருப்பார்கள். அதன்காரணமாக உளவளத்துணையாளர்களின் உதவியைப் பெற்றுக்கொள்வதும் அவர்களது எதிர்கால நலனுக்கு இன்றியமையாததொன்றாகும். அத்துடன், குறித்த நபரால் அவரது குடும்பமும் பாதிக்கப்பட்டு, அவருக்கும் குடும்பத்திற்கும் இடையில் விரிசலான நிலைமைகள் உருவாகியிருக்கும். இவ்வாறான நிலைமைகளை ஆரோக்கியமான வழிகளில் கையாழ உளவளத்துயைhளரின் உதவி அவசியமானதாகும்.
2. குழுச் சிகிச்சை வழங்கல்:
போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீட்சிபெற்றவரின் அப்போதைய துன்பியல் நிகழ்வுகள், மற்றும் அனுபவங்கள் மற்றும் அதிலிருந்து அவர் மீட்சிபெற அவர் கையாண்ட உபாயங்கள் என்பனவற்றை, போதைக்கு அடிமைப்பட்டு, அதிலிருந்து விடுபட விரும்புகின்ற நபர்கள் கூட்டாக இணைந்து கலந்துரையாடி அவருடன் பகிர்ந்து கொள்வதுதான் குழச் சிகிச்சை வழங்களாகும்.
இதில் போதையை விட்ட நபரும் அவரது குடும்ப அங்கத்தவர்களும் தங்களது கடந்தகால அனுபவங்களை கண்ணீர் விட்டழுது பகிர்ந்துகொள்வர். இதனை ஒரு உளவளத்துணையாளர் அல்லது உள மருத்துவர் மிக திட்டமிட்ட அடிப்படையில் ஒழுங்குபடுத்தி வழிப்படுத்துதல் வேண்டும். இங்கு பகிர்ந்து கொள்ளப்படும் விடயங்கள் அனைத்தும் மிக இரகசியமான முறையில் பேணப்படல் வேண்டும்.
3. புனர்வாழ்வளித்தல்:
போதைக்கு மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்பதற்காக புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதற்காக அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற மற்றும் அரசாங்கம் நேரடியாக நடாத்துகின்ற புனர்வாழ்வு நிலையங்களும் உண்டு.
இதில் இவர்கள் முழுநாட்களாக தங்கவைக்கப்பட்டு வைத்திய சிகிச்சை, உளவளத்துணை நடவடிக்கைகள், மற்றும் அவர்களது வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்கான வழிகாட்டல்கள் மற்றும் அவர்களது வாழ்வை மீள ஒழுங்கமைத்துக் கொள்வதற்கான பயிற்சிகள் போன்றவற்றிற்கு உட்படுத்தப்படுவார்கள்.
இவ்வாறான புனர்வாழ்வு நடவடிக்கைக்கு உட்பட்டவர்கள் போதையிலிருந்து விடுபடுவதற்கான மனநிலை, வாழ்க்கைத்திறன்கள், மற்றும் பொதுவான அவசியமான அறிவு, திறன், மனப்பாங்கு மாற்றங்களைப் முறையாகப் பெற்றுக்கொண்டு, குடும்ப வாழ்வுடனும் சமூகத்துடனும் இணைக்கப்படுவர்.
உசாத்துணை:
- தயா சோமசுந்தரம் சா. சிவயோகன்,(2004), “தமிழர் சமுதாயத்தில் உளநலம்” , சாந்திகம்- யாழ்ப்பாணம். பக்கம்: 219-233
- றவூப் ஸெய்ன்,(2013), “கட்டிளமைப்பருவம் - ஆலோசனைகளும் வழிகாட்டல்களும்”, அபிவிருத்திக் கற்கைகளுக்கான மத்திய நிலையம், திஹாரிய. பக்கம்: 62-79
- ரீ.ரீ.மயூரன்,(2004), “மானசம் உளநல மஞ்சரி”, சாந்திகம்- யாழ்ப்பாணம். பக்கம்: 38-41

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments