Subaideen Abdeen BA (Hons), Dip. in. Counsellingஉளவளத்துணை உத்தியோகத்தர்,சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு,பிரதேச செயலகம், அக்கரைப்பற்று.
சுபைதீன் ஆப்தீன் என்பவர் இந்த உளவிழி இணையத்தளத்தின் பிரதான ஆசிரியராவார்.
இவர் பாலமுனைக் கிராமத்தில் 1979.09.20ம் திகதி அபூபக்கர் சுபைதீன் மற்றும் கதிர்லெப்பை றாஹிலா உம்மா தம்பதியினருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
இவா் தனது ஆரம்பக்கல்வி, இரண்டாம் நிலைக்கல்வி மற்றும் உயர்தரக் கல்வியை தனது தாய்ப் பாடசாலையான அக் / மின்ஹாஜ் மகா வித்தியாலயத்தில் கற்றவர். அந்தப்பாடசாலையிலிருந்து உயார்தரப்பரீட்சையில் சித்தியடைந்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு உயர் கல்விக்காக தேர்வு செய்யப்பட்டு, தனது பட்டப்படிப்பை கலைத்துறையில் மெய்யியல் விசேட துறையாக தெரிவு செய்து கற்றவர் (2007). பின்னர் தொழில்வாண்மை உளவளத்துணை டிப்ளோமாப் பாடநெறியையும் அதே பல்கலையில் கற்று (2010), தற்போது ஒரு உளவியல் உளவளத்துணையாளராக அம்பாறை மாவட்ட செயலகத்தில் பணிபுரிகின்றார்.
தலைமைத்துவம், பேச்சாற்றல், எழுத்தாற்றல், புத்தாக்க சிந்தனை, திட்ட முகாமைத்துவம், அறிக்கைப்படுத்தல், செய்தியாக்கம் ஆகிய ஆற்றல்களையும் திறன்களையும் வாய்க்கப்பெற்றவர்
இவர் அரசசேவையில் சுமார் 10 வருடகால அனுபவங்களையும், சமூக அபிவிருத்திப் பணியிலும், உளசமூக ஆற்றுப்படுத்தல் பணியிலும் சுமார் 20 வருடகால அணுபவங்களைக் கொண்டவர். யுத்தம் மற்றும் சுனாமி போன்ற இயற்கை அனா்த்தம், பொருளாதார நெருக்கடிநிலைக்குள் அகப்பட்டவா்கள் மற்றும் போதைக்கு அடிமைப்பட்டவா்கள் ஆகியனவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவி செய்வதிலும் அவா்களை அந்நிலைமையிலிருந்து மீழச் செய்வதிலும் தன்னை அர்ப்பணித்தவா் இப்போதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருப்பவா்.
மேலும், இவா் உளவளத்துணை மற்றும் உளசமூக டிப்ளோமா பாடநெறிகளை கற்க்கின்ற மாணவா்களுக்கு மேற்ப்பார்வையாளராகவும் பயிற்றுவிப்பாளராகவும் செயல்பட்டுவருபவர். பல்வேறு செயலமா்வுகளில் பல தலைப்புக்களில் வளவாளராகவும் செயற்பட்டு வருபவர்.
இவா் தனது வாழ்க்கைக் காலத்தில் பல இன்னல்களையும் துயரங்களையும் சந்தித்தவா். பல சிவில் சமூகங்களுடனும் சில இஸ்லாமிய அமைப்புக்களுடனும் இணைந்து பணியாற்றி வருபவா். இவா் பற்றிய முழுமையான தகவல்களைப் பெற இவரது வரலாறு பற்றிய குறிப்பைப் பெறுவதன் மூலமாக இவா் பற்றிய முழுமையான விளக்கத்தை அறிந்து கொள்ளலாம்.
