சுய வளர்ச்சி - Self Development

 மனிதன் என்பவன் உடல், உள்ளம், ஆன்மா ஆகியவற்றைக் கொண்டுள்ள இறைவனால் படைக்கப்பட்ட, படைப்புக்களிலெல்லாம் மிகவும் உயர்ந்த படைப்பாகும். இம்மனித வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டிய விடயம் “சுய வளர்ச்சி” என்ற பகுதியாகும். இங்கு சுயம் என்பது ‘நான்’ என்ற பதத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றது. ஒரு சமுதாய அபிவிருத்தியின் அங்கமான குடும்பமும், அதன் அபிவிருத்தியும் தனி மனிதனின் அபிவிருத்தியிலேயே தங்கியிருக்கின்றது. இத்தனி மனித அபிவிருத்தியானது அதன் சுயவளர்ச்சி அபிவிருத்தியையே கருவாகக் கொண்டுள்ளது.


சுயவளர்ச்சி என்றால் என்ன? என்பது பற்றி பல்வேறு விதமான கருத்துக்கள் காணப்படுகின்றன.

ஒருவர் தனது வரையறைகள், ஆற்றல்கள், தன்னைப்பற்றிய சாதகமான மதிப்பீடுகள் என்பவற்றைக் கொண்ட யதார்த்தபூர்வமான சுய எண்ணக்கரு ஒன்றினை விருத்தி செய்தல் சுயவளர்ச்சியாகும் எனக்கூறப்படுகிறது.

ஒருவர் தன்மீது அகக்கட்டுப்பாட்டினை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்பது சுய அபிவிருத்தியாகும் எனக் கருதப்படுகிறது.

ஒருவர் தனது நடத்தைகள், அம்சங்கள், அன்புணர்வு. அறிவு ஆகியவற்றை விருத்தி செய்து கொள்ளுதலே சுயவிருத்தி என்பதற்கு மற்றுமொரு கருத்தாகும்


சுயத்தை அடயாளப்படுத்தல் (Self Identification)

ஒரு தனிமனிதனை எடுத்து நோக்கினால் அவன் தன்னை சமூகத்திற்கு அல்லது தன்னைச் சார்ந்தோருக்கு பின்வரும் 04 விடயங்களினூடாக அடையாளப்படுத்தப்படுகின்றான். இதனை நாம் சுய அடயாளப்படுத்தல் கூறுகள் (ளுநடக ஐனநவெகைiஉயவழைn நுடநஅநவௌ)என அழைப்பர். 


1. பின்னணி (Back Ground)

தனிமனிதன் தனது சுயத்தை அடையாளப்படுத்துகின்ற விடயத்தில் அவன் சார்ந்துள்ள பின்னணி மிக முக்கியமானதாகும். அதில் அவன் சார்ந்துள்ள குடும்பம், இனம், சமயம், மொழி, பால்நிலை, அவனது பிறப்பிடப் பிரதேசம், கல்விநிலை உள்ளடங்களான பரம்பரையும் சூழலும் என்பனவற்றைக் கொண்டு அடையாளத்தை விபரிக்க முனைகின்றனர்.

2. பாத்திரங்கள் (Roles)

அடுத்து மனிதன் தன்னை அடையாளப்படுத்துகின்ற மற்றுமொரு கூறு அவன் வகிக்கின்ற, வகித்த, வகிக்கப்போகின்ற பாத்திரங்கள் ஊடாகவாகும். அவனது வாழ்வில் அவன் பல்வேறு சூழ்நிலைகளில் பல்வேறு பாத்திரங்களை வகித்து வந்திருக்கின்றான். கணவனாக, மகனாக, தந்தையாக, சகோதரனாக எனக் குடும்பத்திலும், மாணவனாக, ஆசிரியனாக பாடசாலைகளிலும், நண்பனாக சகபாடிகள் மத்தியிலும், உதவுபவனாக, காவலனாக, மற்றும் தொழில் ரீதியில் அடையாளப்படுத்துபவனாக போன்ற பல பாத்திரங்களை தனது சமுகத்திலும் என பல பாத்திரங்களையும் அவன் வகித்து வந்திருப்பான். அதனூடாக அவன் தன்னை அடையாளப்படுத்த முனைகின்றான்.

3. தொடர்பிணைப்புக்கள் (Links)

ஒரு மனிதன் பிரறோடு கொண்டுள்ள மற்றும் அகச்சூழல், புறச்சூழல் என்பனவற்றில் அவன் ஏற்படுத்தி இருக்கின்ற உறவுகள், தொடர்புகள், அவனது சகபாடிகள், சார்ந்துள்ள குடும்பங்கள் மூலமாக விளங்கப்படுத்தப்படவும் அடையாளப்படத்தப்படவும் செய்கின்றான்.

4. இலக்குகள் (Goals)

ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து பெற்றுக் கொள்கின்ற கருத்தியல்கள், அனுபவங்கள், கற்றல்கள், சவால்கள், பிரச்சினைகள் என்பவற்றை அனுபவித்து அதனமைவாக தனது வாழ்கையின் பயணத்திற்கு ஒரு இலக்கினை வடிவமைத்துக் கொள்கின்றான். அதனை நோக்கியே அவனது நகர்வுகள் முனைப்பாகின்றன. எனவே ஒரு மனிதன் தான் கொண்டுள்ள வாழ்வியல் இலக்கு மூலமாகவும் அவன் அடையாளப்படுத்தப் படுகின்றான்.

இங்கு மேலே விபரிக்கப்பட்ட பின்னணி, பாத்திரங்கள், தொடர்பிணைப்புக்கள் மற்றும் இலக்குகள் ஆகிய விடயங்களானது ஒரு மனிதனின் ஆளுமையில் தங்கியிருப்பதுடன், அவனது ஆளுமையை சீர் செய்வதிலும் காத்திரமான பங்கினை வகிக்கின்றது. 


நான் யார்? (Who am I?)

சோக்கிரடீஸ் என்ற தத்துவவியலாளர்; “உன்னையே நீ அறிவாய்” என்றார். ஒரு மனிதனின் சுயவிருத்தியின் தூண்டலாக அமைவது, அவன் முதலில் தனக்குள் தன்னைத் தேடுதல் வேண்டும். ஒவ்வொரு மனிதனும் நான் யார்? எனது வாழ்வு எதற்காக? எனது இலக்கு எத்தகையது? மற்றவர்கள் என்னை எவ்வாறு நோக்குகிறார்கள்? நான் எதற்காக படைக்கப்பட்டுள்ளேன்? என்ற கேள்வியை தனக்குள்ளேயே கேட்டு நான் யார்? என்பதற்கு விடைகாணல் வேண்டும்.

ஒவ்வொரு மனிதனிடமும் நான் யார்? என்ற சுய எண்ணக்கரு(Self Concept) காணப்படலாம். இவ் எண்ணக்கரு நேர் நிலையானதாக(Positive) உள்ளபோது அம்மனிதம் மகிழ்ச்சியில் மூழ்கின்றது, முன்னேற்றமடைகின்றது. அதேநேரம் சுய எண்ணக்கரு நோயுற்ற நிலைமையானதாக, அகங்காரங்கூடியதாக, மறை நிலையானதாக(Negative) உள்ளபோது, அம்மனிதம் மகிழ்ச்சியின்மையில் மூழ்கி மனிதத்தை மனிதனே தனக்குள் தேடும் அபாயம் ஏற்படுகிறது.

நான் என்பது எங்களிடையே காணப்படுகின்ற அறிவுப் பெறுமானங்கள், மனப்பான்மைகள் திறன்கள் என்பவற்றின் தொகுப்பே ஆகும். மதங்களும் பிரிவுகளும் ஒருவர் தன்னைத்தானே கண்டு கொள்வதற்குரிய பல்வேறு மார்க்கங்களை ஏற்படுத்துகின்றன.

ஒருவர் தன்னை பொதுவாக சரியானவர், ஆற்றலுடயவர், துடிப்புடையவர் என்று கருதுகின்ற சந்தர்ப்பங்களில், இந்த நான் என்ற எண்ணக்கரு உயர்வானதாகவும் சாதகமானதாகவும் இருக்கும். எந்த  சந்தர்ப்பத்தில் ஒருவன் தன்னை விரும்பாமலும் தகுதியற்றவன் என்றும் நினைக்கின்ற வேளைகளில் இது பாதகமானதாகவும் தரம் குறைந்ததாகவும் காணப்படும். இங்கு தங்களது நான் பற்றிய எண்ணக்கருவை மிகைப்படுத்தி உண்மைக்கு புறம்பாகக் கூறும் சுய எண்ணக்கரு உடையவர்களையும் காணமுடியும். அதேபோன்று உண்மையான, சமநிலையான எண்ணக்கருவை உடையவர்களையும் நாம் காணமுடியும். இங்கு ஒவ்வொரு மனிதனும் தன்னைப் பற்றிய சுய எண்ணக்கரு ஒன்றினை கொண்டுள்ளான் என்பதை அங்கீகரித்தலே முக்கியமானதாகும்.

சுயவளர்சிக்குத் திட்டமிடல் (Plan for the Self Development):

மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வும் திட்டமிடலினுhடாக செல்லுதல் வேண்டும். அதிலும் குறிப்பாக தன்னுடைய சுயத்தை விருத்தி செய்வதில் முன்னுரிமையளித்தல் முதன்மையானதாகும். இங்கு ‘வளர்ச்சி, விருத்தி’ ஆகிய இரு பகுதிகளுக்கு சம அளவான கவனம் வழங்கப்படுதல் வேண்டும். 

அந்தவகையில், சுயவளர்ச்சிக்குத் திட்டமிடும் போது பின்வரும் படிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

1. வளர்ச்சிப் பரப்பினை அடையாளங் காணல்:

அதாவது, வளர்ச்சியடைய விரும்பும் ஒருவர் தன்னினுள் உள்ள அறிவு, திறன், நடத்தைகள், அம்சங்கள், மனப்பாங்குகள், அவை தோன்றுகின்ற தன்மைகள் மற்றும் அவனது வளர்ச்சி, விருத்தி என்வற்றிற்கான கூறுகள் போன்றவற்றை அடயாளங் காணல் வேண்டும்.

2. தடைகளை அடயாளங்காணல்

ஒருவனின் சுயவளர்ச்சிக்குத் தடையாக தன்னால் தனக்குள்ளேயே இனங்காணப்படக்கூடிய தடைகள் மற்றும் புறச்சூழலிலே இருந்து எதிர்கொள்ளக்கூடிய தடைகள் எவை என அவர் பகுப்பாய்வு செய்து அடையாளப்படுத்தல் வேண்டும்.

 3. தேவைகளை முன்னுரிமைப்படுத்தல்

தன்னில் வளர்க்கப் படவேண்டியுள்ள ஆற்றல்கள், திறமைகள், நடத்தைகள், பண்பாடுகள், மனப்பாங்குகள் என்ன என்பதை தெரிந்தறிந்து, முக்கியத்துவத்தை முன்னுரிமைப்படுத்தி வளர்ப்பதற்கு முயற்சித்தல் வேண்டும்.

4. திட்டமிடல்:

சுயவளர்ச்சிக்கான விருத்தியை மேம்படுத்துவதற்கு சிறந்த திட்டமிடலொன்றை வகுத்து செயற்படுத்துவது மிக முக்கியமானதாகும். மிகவும் சிறந்த இலக்கு ஒன்றினை நோக்கி அத்திட்டமிடல் சீரமைக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படவேண்டும். இத்திட்டமிடலானது மனிதனின் உடல், உள்ளம் மற்றும் ஆன்மா ஆகியவற்றை முழுமையாக விருத்தி செய்கின்ற விதத்தில் அமையப் பெறல் வேண்டும்.

5. மற்றவர்களின் உதவியை நாடல் :

சுயவளர்ச்சிக்கான திட்டமிடலை அடியொற்றி செற்படுத்தும் போது மற்றவர்களின் உதவி இன்றியமையாத ஒன்றாகும். சகபாடிகள், குடும்ப அங்கத்தவர்களின் உதவியை இங்கு, பெற்றுக் கொள்ளமுடியும். அவர்கள் மூலமாக தன்னைப்பற்றிய பின்னுhட்டல்களை(குநநன டீயஉம) பெற்றுக் கொண்டு செயற்படலாம். இங்கு, தன்னைப்பற்றிய நல்லதும் கெட்டதுமான விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து ஏற்றுக்கொள்ளளும் அவசியமாகும். ஏனெனில், ஒவ்வொரு மனிதனும் முழுமை அற்றவர் என்பதை கருத்திற் கொள்ளல் வேண்டும்.

6. சுயவளர்சியைக் கண்காணித்தலும் மதிப்பிடலும்

சுயவளர்ச்சிக்காண திட்டமிடலும் செயன்முறைப் படிமுறைகளும் மிகவும் ஒழுங்கான முறையில் கண்காணிக்கப்படுவதும், காலத்திற்கு காலம் மதிப்பிட்டு மறுசீரமைத்துக் கொள்ளலும் மிகவும் அவசியமான ஒன்றாகும்.


சுயவளர்ச்சியை திட்டமிடுவதற்கான சில கருவிகள் (Some Tools for Self Development): 

1. சுய ஆய்வு (Self Evaluation):

மனிதன் மனிதனாக – மனிதருள் உயர்ந்தவராக வாழ வேண்டும். இது இன்றைய கல்வியியளாலர்களின் எதிர்பார்ப்பு. இதற்காக முதலில் தன்னை அறிய வேண்டும் அவ்வாறாயின் தன்னை திறந்த மனதுடன் ஆய்வு செய்யவேண்டும்.

தன்னைப்பற்றி தனக்குள்ளயே கேட்டுக்கொள்வது சுய ஆய்வாகும். சுய ஆய்வை பல கோணங்களில் மேற்கொள்ளலாம். உதாரணமாக: ஒரு நாளை எடுத்து அந்நாளின் செயற்பாடுகளை அந்நாளின் முடிவில்  ஆய்வு செய்யலாம். அதேபோன்று ஒவ்வொரு மாதத்தின் பின்னும், ஒரு வருடத்தின் பின்னும் ஆய்வு செய்யலாம்.

ஒட்டுமொத்தமாக, இதுவரை காலமும் நான் எவ்வாறு செயற்பட்டேன்? நான் சாதித்தது என்ன? எனது சமூகத்திற்காக எதைச் செய்தேன்? என்னில் என்ன மாற்றத்தை செய்தால் இன்னும் மேம்படலாம்? நான் சம்பாதித்த நன்மைகள், தீமைகள் என்ன? என பலகோணங்களில் சுய ஆய்வுக்கு உட்படுத்தி எனது வாழ்கைப் பாதையை மாற்றலாம். இவ்வாய்வில் ஒருவன் தனது திறந்த தன்மையை வெளிப்படுத்துதல் வேண்டும்.

இதனூடாக, அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறு சிறு தவறுகளில் இருந்து விடுபட்டு கொள்ளவும், ஏற்க முடியாத உணர்வுகளிலிருந்து விடுபடவும் தன் இலட்சியத்தை நோக்கி பயணம் செய்யவும் வழி ஏற்படுத்தலாம். இதன்மூலம் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு ஒரு சிறப்பான திட்டத்தை வகுத்துக் கொள்ளமுடியும். 

2. SWOT பகுப்பாய்வு:

ஒரு மனிதனின் சுய விருத்தியை  ளுறுழுவு  பகுப்பாய்வு கருவியுடாகவும் பகுப்பாய்வு செய்து  கொள்ள முடியும். இக்கருவியானது தனிமனிதன் தொடக்கம் ஒரு தேசம் வரைக்குமான நிறுவனங்களைப் பகுப்பாய்வு செய்து திட்டமிட்டு அபிவிருத்திக்கான வழிகளை வகுத்துக் கொள்ள பயன்படுத்தப்படுகின்றது.

SWOT 

S – Strength            - பலம்

W-Weakness            - பலவீனம்

O-Opportunity        - சந்தர்ப்பங்கள்/வாய்ப்புக்கள்

T-Threats                  - அச்சுறுத்தல்கள்


ஒரு மனிதன் தன்னை அபிவிருத்தி செய்து கெள்ள வேண்டுமானால், அவன் தன்னில் இருக்கின்ற பலம், பலவீனம் என்பவற்றையும் தெளிவாகவும் துள்ளியமாகவும் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

நம்மில் இருக்கின்ற பலங்களையும் பலவீனங்களையும் ஒரு பகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எமது பலங்களை ஏற்றுக் கொண்டு வளர்க்கும் அதே வேளையில், எமது பலவீனங்களையும் ஏற்று, அதை இல்லாமலாக்க முயற்சித்தல் வேண்டும். 

எமது பலவீனத்தை நாம் உணராத வரையில் பலவீனம் எம்மை ஆளும். இதற்காக எம்மை நோக்கி இருக்கின்ற சந்தர்ப்பங்களை திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனூடாக எம்மில் பலத்தை விருத்தி செய்து எமக்குள்ள பலவீனங்களையும் அச்சுறுத்தல்களையும் இல்லாமல் செய்து அபிவிருத்தியடையலாம்.

3. ஜோகாரி ஜன்னல் (Johary window):

இத்தத்துவம் ஒரு மனிதனின் திறந்த வெளிப்படையான தன்மையை அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றது. இது மற்றவர்களுடனான எனது உறவு முறையை விபரிக்கின்றது.

மனிதனை 04 அம்சங்களாக பிரிக்கும் ஜோகாரி, ஒரு மனிதனின் ஒரு அங்கமாக சுயவெளிப்பாடு(தன்னை திறந்து காட்டல்) என்பதை தானும் பிறரும் தெரிந்த ஒன்றான “தனது திறந்த தன்மையை” குறிப்பிடுகின்றார். அதேபோல், ஒரு மனிதனில் தனக்குத் தெரிந்த ஆனால், மற்றவருக்கு தெரியாத தான் “மறைத்துள்ள பகுதியும்”  உண்டு. அதேபோல, தான் அறியாத ஏனையோர் அறிந்த “தான் அறியாத இருள் பகுதி” யான ஒரு அங்கமும் உண்டு. இது தனக்கு புலப்படாத தன்மையாகும். இறுதியாக, தனக்கும் மற்றவர்களுக்கும் புலப்படாத இருள் நிறைந்த பகுதியும் உண்டு என விளக்குகிறார்.


இதில் ஒரு மனிதன் “தனது திறந்ததன்மையை” அதிகரிப்பதற்கும் “யாரும் கண்டறியாத” இருள் பகுதியை காண விளைவதற்குமான திட்டங்களையும் செயன்முறைகளையும் முன்னெடுக்கின்ற போதுதான் அவனது சுயம் விருத்தியடையும் என விளங்கிக் கொள்ள முடியும். எனவே, இச்செயன்முறை பற்றிய புரிதல் தனிமனித அபிவிருத்திக்கு மிகவும் அவசியமாகும்.


4.    VOSA:

இங்கு VOSA என்பது அபிவிருத்திசார் துறையினர்கள் பயன்படுத்துகின்ற மிகமுக்கியமான கருவியாகும். இதனை நாம் ஒரு தனிமனிதனின் சுய விருத்திக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

VOSA இல்,

V - Visioning  - இலட்சியம்

O - Obstacles - தடைகள் 

S - Strategies - வழிமுறைகள்/உபாயங்;கள்

A - Activities  - செயற்பாடுகள்


ஒரு மனிதன் தன்னை அபிவிருத்தி செய்ய வேண்டுமாயின் முதலில் சரியான இலக்கை உறுதியாக வகுத்துக் கொள்ளல் வேண்டும். பின்னர் அவ்விலக்கினை அடைவதில் உள்ள தடைகளை இனங்கன்டு அவற்றை தாண்டி செல்வதற்கான உபாய மார்க்கங்களையும் அதனை அடியொற்றிய செயற்பாடுகளையும் வகுத்துக் கொள்வதன் மூலம் சுயத்தை அபிவிருத்தி செய்யலாம்.

“நீ உன்னை தகுதி உள்ளவனாக மாற்றிக் கொள்! மற்றவர்களின் தேவைகள் உனக்கான சந்தர்ப்பங்களை உன்வீட்டு வாசற்படியில் கொண்டுவரும்.” என்ற அப்துல் றஹீமின் சிந்தனைக்கேற்ப, ஒரு மனிதன் தனது உடல், உளம், ஆன்மா ஆகிய அம்சங்கள் அடங்கிய தன்னுடைய சுயத்தை திட்டமிட்ட அடிப்படையில் விருத்தி செய்து, சமுகத்திற்கு இன்றியமையாத ஒருவனாக திகழ்வதே அவன் சார்ந்துள்ள சமூகத்தின் எதிர்பார்ப்பும் சுயவிருத்தியினுடாக ஒரு மனிதன் அடைய வேண்டிய உச்சப் பெறுபேறுமாகும்.


உசாத்துணைகள்:

  1. பங்கேற்புப் பயிற்ச்சிக் கையேடு - இலங்கை மன்றக் கல்லூரி
  2. நான் உளவியல் சஞ்சிகை - (மலர்-29, இதழ்-02, பக்கம்:15-21, யாழ்ப்பாணம்)
  3. நான் உளவியல் சஞ்சிகை -(மலர்-33,இதழ்-01,பக்கம்:02-05,யாழ்ப்பாணம்)

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...

0 Comments