முதியோர்களும் அவர்களின் உளவள மேம்பாடும்

முதியோர்கள் என்பவர்கள் சமூகத்தில் இன்றியமையாத ஒரு அங்கமாகும். முதுமைப்பருவமானது மனித வளர்ச்சி மற்றும் விருத்திப்படிநிலையில் இறுதியாகவுள்ள ஒரு கட்டமாகும். இன்று பொதுவாக மனிதனில் 60 வயதெல்லையைத் தாண்டியவர்கள் அனைவரையும் முதியோர்கள் என்ற வட்டத்திற்குள் வரையறுகின்றனர். 

“ஒவரின் உடலில் உள்ள கலங்களிலும் தொகுதிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டு, அவரது தொழிற்பாடுகளில் (உடல், மூளை சம்பந்தப்பட்ட) ஒரு படிப்படியான தேய்வு ஏற்படுகின்ற நிலையே முதுமை” என வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது. (தமிழர் சமுதாயத்தில் உளநலம், பக்:191)

இவ்வாறான முதுமையானது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அனைவரும் இறப்புவரை எதிர்கொள்ள வேண்டிய ஒரு கட்டமாகும் என்பதனை எவரும் மறுக்க முடியாது. இன்று உலகில் முதியவர்களின் தொகை சுமார் 800 மில்லியனத் தாண்டியுள்ளதாகவும் இலங்கையில் சுமார் 2.2 மில்லியனை அடைந்துள்ளதாகவும், இது மொத்த சனத்தொகையில் 12 வீதமாகும் எனவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

 

இவ்வாறான முதியோர்கள் அனைவரும் நமது சமூகத்தில் பெறுமதியானவர்களாவர். இவர்களுக்கான பராமரிப்பில் எந்தவொரு சமூகமும் கரிசனையற்று பராமுகமாக இருக்கக்கூடாது. ஏனெனில், இவர்கள்

முதிர்ந்த அனுபவமும் அறிவும் முதிர்ச்சியும் பெற்றவர்கள். “எந்தவொரு மனிதனையும் இறைவன் இவ்வுலகில் வீணாகப் படைக்கவில்லை” என்ற நியதிக்கேற்ப்ப மனிதனது முதுமைப் பருவத்தில் கூட நாம் அவர்களை ஒதுக்கவோ புறக்கணிக்கவோ முடியாது. அன்பு, காப்பு, கணிப்பு போன்ற தேவைப்படிநிலைகளில் கூட இவர்கள் புறக்கணிக்கப்பட முடியாதவர்கள். அவர்களுக்கான கடப்பாட்டிலிருந்து எவரும் விலகிச் செல்லமுடியாது. ஒரு சமூகத்தில் நல்ல ஆரோக்கியமான முதியோர்கள் இருப்பதானது அச்சமூகமடைந்த வரப்பிரசாதமாகும்.


மனிதன் குழந்தையாகப் பிறந்த நிலையில், அவனது குழந்தைப்பருவத்தில் அவனுக்கு எந்தவொரு குறைபாடும் நேராமலும் ஆபத்துக்கள், நோய்கள் மற்றும் அனர்த்தங்கள் வராமலும் அதிலிருந்து பாதுகாக்கப்படுவதற்கு அவனது பெற்றோர்கள் எடுக்கின்ற பிரயத்தனங்கள் மற்றும் முயற்சிகள் போன்றுதான், அவனது பெற்றோர்கள் முதுமைப்பருவத்தினை அடையும்போது குழந்தை போன்ற நடத்தைகளை வெளிக்காட்ட முனைவர். அப்போது, அப்பிள்ளை தன்னைக் கண்காணித்து வளர்த்தது போல் தனது பெற்றோரையும் அவர்களது முதுமைப்பருவத்தில் எக்குறையும் ஏற்படாது கண்காணித்து பாதுகாப்பது கட்டாயக் கடமையாகும் என்பதை ஒவ்வொருவரும் உணர்தல் வேண்டும்.

ஆனால், இன்றைய உலகில் இவற்றிற்கு மாறான செயற்பாடுகள் பெரும்பாலானவர்களால் தமது முதுமை வயதுடைய பெற்றோருக்கு எதிராக இழைக்கப்பட்டுவருகின்றன.

அண்மையில், ஒரு முதியவர் தன்னை முறையாக தனது மகன் பராமரிக்க மறுக்கின்றார். எனக்கு அவர் மாதாந்தம் தருகின்ற பராமரிப்புத் தொகையான ரூபா.2000.00 ஐக் கூட தரமறுக்கின்றார். எனவே, எனக்கு முறையான ஆலோசனையை வழங்குமாறு கேட்டு சட்டத்தரணி ஒருவரின் உதவியை அம்முதியவர் நாடியுள்ளார். அப்போது, அச்சட்டத்தரணி அவரது மகனை அழைத்து நிலைமையை விளக்கியுள்ளார். மேலும், அந்த பராமரிப்புத் தொகையையும் கொடுக்குமாறு கேட்டுள்ளார். ஆனாலும், அவரது மகன் விதண்டாவாதம் புரிந்து தந்தையின் கோரிக்கையை புறக்கணித்துள்ளார். இதன் பின்னர், அச்சட்டத்தரணி நீதி மன்றில் அவரது மகனுக்கு எதிராக வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தார். இதன்போது, நீதிவான் இவ்வழக்கை விசாரித்து விட்டுத் தீர்ப்பாக, உரிய முதியவரின் மகன் பராமரிப்புக் கொடுப்பனவாக மாதாந்தம் ரூபா 5,000.00 வழங்க வேண்டும். தவறின் 06 மாதங்கள் சிறைவாசம் செல்ல வேண்டுமென்று கடுமையான எச்சரிக்கையுடன் தீர்ப்பு வழங்கியுள்ளார். இது ஒரு சிறந்த தீர்ப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஏனெனில், இன்றைய இளஞ் சந்ததியினரில் பெரும்பாலானோர் தங்களது பெற்றோர் முதுமையை அடைந்ததும் அவர்களை கிழடு, உதவாக்கரை, வயசு, நோய்களின் உறைவிடம் என்றெல்லாம் விமர்சித்து, அவர்களை ஒதுக்கிவிட முனைகின்றனர். அத்தோடு, அவர்கள் தங்களது வாழ்க்கைக்கு இதுவொரு சாபக்கேடு, இடைஞ்சல் என்றெண்ணி, முதியோர் இல்லங்களில் அல்லது வீட்டின் ஒரு ஒதுக்குப் புறத்தில் அவர்களை ஒதுக்கி விடுகின்றனர். இவ்வாறான நிலைமைகள் நமது இன்றைய சமூகத்திலும் காணப்படுவதற்கான காரணம், உலகமயமாக்களால் கலாச்சாரங்களிலும் பண்பாடுகளிலும் ஏற்படுத்தப்பட்ட நேரெதிரான தாக்கங்களின் விளைவுகளாகவும் கருத்தியல் மாற்றங்களாகவும் கருதவேண்டியுள்ளது எனலாம்.

இதனால், பெரும்பாலான முதியோர்கள் இன்று சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்து பல்வேறு உடல் உபாதைகளுக்கும் உள நெருக்கீடுகளுக்கும் சஞ்சலங்களுக்கும் ஆட்பட்டு அல்லல் படுகின்ற தெருவோரங்களில் துhங்கிக் கழிக்கின்ற அவல நிலையை இன்றைய சு+ழலில் நாம் காண முடியும்.

இன்று நமது சமூகத்திலுள்ள பெரும்பாலான முதியோர்கள் பல்வேறுவிதமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்கள். அந்தவகையில், பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டமுடியும்.

  • உடல் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் உடல்சார் நோய்கள்:

மனிதனின் வயது செல்லச் செல்ல அவனது உடலானது பல்வேறு வழிகளிலும் தளர்வடைவது இயல்பாகும். அவனது உடல்பாகங்கள் மற்றும் அவனது ஐம்பொறிகள் என்பன பலவீனமான நிலையை அடைகின்றது. இதன்போது, முதியவர்கள் தங்களது வழமையான செயற்பாடுகளிலிருந்து சற்று சோர்வடைந்த நிலையினை அடைவார்கள். இவ்வாறானவர்கள் நோய்தத் hக்கத்திற்கு இலகுவாக ஆட்படக்கூடியவர்களாகவும் காணப்படுவர்.

ஆனாலும், இவ்விடயத்தில் சிலர் விதிவிலக்காகக் காணப்படுவர். காரணம் அவர்கள் தங்களது இளமைக்காலத்தில் சுகந்தமான நிலையை அனுபவித்தவர்களாகவும் தங்களது உடல்

ஆரோக்கியத்திலும் தங்களது சுய கவனிப்பிலும் பூரணமான கவனம் செலுத்தி வந்தவர்களாகவும் காணப்பட்டமையினாலேயே ஆகும்.

  • உள ரீதியான பிரச்சினைகள்:
முதுமையில் உடல் நிலையைப் போன்று, உளமும் பாதிக்கப்படுகின்ற நிலையை அவதானிக்க முடியும். அந்தவகையில், முதுமையில் உளநலத்தைப் பாதிக்கும் காரணிகளாக பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்ட முடியும்.


1.உடற்காரணிகள் :

முதுமை நிலையின் போது தனது உடலின் தனi; மகள் மற்றும் இயக்கப்பாடுகள் தளர்வடைகின்ற போது, இயல்பாகவே உளம் அதைப்பற்றிய நேரெதிரான உணர்வினை அடையும்.இதனால் அம்முதியோரின் எண்ணம், சிந்தனை மற்றும் மனப்பாங்கு என்பனவற்றில் பல்வேறு வேண்டத்தகாத மாற்றங்கள் ஏற்படுவதை அவதானிக்க முடியும்.

2.உளக்காரணிகள் :

முதுமை பற்றி ஒருவர் கொண்டிருக்கின்ற கருத்து நிலையும், அவர் இவ்வளவு காலமும் வாழ்ந்து வந்த வாழ்க்கைப் பின்னணியும், அவரது தனிப்பட்ட ஆளுமைக் காரணிகளும் இணைந்தே முதுமையில் ஏற்படும் உளவியல் பாதிப்புக்களுக்கு காரணமாகின்றன. (முதுமை (2001), பக்: 38))

முதுமை அடைகின்றபோதும் முதுமையான நிலையின் போதும் ஒரு மனிதன ; பல்வேறு பிரச்சினைகளுக்கும் சிக்கல்களுக்கும் முகங்கொடுக்க முனைவது இயல்பாகும். இவ்வாறான நிலைமையானது அம்மனிதனால் விரும்பி ஏற்கப்படக்கூடியதொன்றல்ல. இந்நிலையின்போது ஒரு முதியவர் தனது வாழ்நாள், தனது வாழ்வின் முடிவு, தனது பராமிப்பு, தனம் Pது குடும்பத்திலுள்ள பிள்ளைகள் மற்றும் உறவுகள் காட்டுகின்ற அசிரத்தையான கவனம், தமக்குத் தேவையான நாளாந்த செலவினங்களை தீர்த்துக் கொள்வதிலுள்ள சவால்கள், தன்னில் குடும்பமும் அயலவர்களும் சமூகமும் ஏற்படுத்துகின்ற புறக்கணிப்புக்கள், தனது தேவைகளை பூர்த்தி செய்வதிலுள்ள இயலாமைகள், தனக்கான பொழுது போக்குகளை கழிப்பதற்கான வசதிகள் இன்மை, தனக்கான வருமானம், தனது நிறைவேற்றப்படாத ஆசைகள், தனது வாழ்கைத்துணை பற்றிய அக்கரை போன்ற அம்சங்களில் கவலையும் சோகமும் நெருக்கீடும் அடைந்த நிலையில் காணப்படுவார். இதனால், அவரது உள்ளமானது பாதிக்கப்பட்டதாகக் காணப்படும். அதன ; பாதிப்பின் தன்மையைப் பொறுத்து இரு விதமாகப் பிரிக்க முடியும்.


1. மிதமான உளப் பிரச்சினைகள்:

  • பதகளிப்பு, மனச்சோர்வு, மெய்ப்பாட்டுநோய்.

  • வெறும் கூட்டு நிலை (Empty Nest Syndrome).

  • இறப்பு பற்றிய அச்சம் மற்றும் பீதி நிலை.

இவ்வாறான பிரச்சினைகள் முறையாக அணுகப்படுவதன் மூலமும் ஒரு உளவளத்துணையாளரின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதன ; மூலமும் பல்வேறு ஆரோக்கியமான வழிமுறைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதன் மூலமும் தீர்வு காணப்படமுடியும்.


2. பாரிய உளப்பிரச்சினை:

- மாறாட்டம் (Confusion): ஒருவர் தனi; னப்பற்றியும் தான் வாழும் சு+ழலைப்பற்றியும் தெளிவில்லாமல் இருத்தலை மாறாட்டம் என்பர்.

- சந்தேக உளமாய நோய் (Paranoid Psychosis): ஏற்கனவே நாட்பட்ட நோய்களையுடையவர்கள் மற்றும் சந்தேக ஆளுமையுடையவர்களிலும் இது ஏற்படும். அதிகமாக இது முதுமை நிலையின் போது கூடுதலாகக் காணப்படும்.

- அறளை பெயர்தல் (Dementia): மூளையின் கலங்கள் படிப்படியாக இறந்தழிந்து

போவதனால் உருவாகின்றது. ஞாபக மறதி, மாறாட்டம், குழப்பமான பேச்சு, உணர்ச்சிக் குழப்பங்கள், தற்கவனக் குறைவு என்பன உருவாகும். இவைகள் அறளை பெயர்தலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படும் அறிகுறிகளாகும்.

இவ்வாறான பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கு ஒரு உளமருத்துவரின் (Psychiatrist) உதவி

இன்றிமையாததொன்றாகும். அத்தோடு, இவ்வாறான முதியோர்களை பராமரிக்கின்றவர்களுக்கு

முறையான ஆலோசனைகளும் உளவளத்துணை வழிகாட்டலும் வழங்கப்படுவதற்கு உளவளத்துணையாளரின் உதவியைப் பெற்றுக்கொடுப்பதன ; மூலமும் பல்வேறு ஆரோக்கியமான வழிமுறைகள் ஏற்படுத்திக்கொடுக்கப்படுவதன ; மூலமும் தாP ;வு காணப்படமுடியும்.

ஆனாலும், இவ்வாறான நிலையிலிருந்தும் பல்வேறு முதியவர்கள் விதிவிலக்குப் பெற்றுக் காணப்படுவர். ஏனெனில், அவர்களது உள்ளமானது எந்தவொரு பிரச்சினையின் போதும் தளர்வடையாது அதற்கு முகங்கொடுத்து, அவற்றை எதிர்கொண்டு வாழப்பழகியதாகக் காணப்படும்.

மேலும், சில முதியவர்கள் பெற்றுள்ள வாழ்க்கைப்பாக்கியமும் ஆரோக்கியமான மனநிலையை கொடுக்கும். அதாவது, அவர்களது குடும்பத்தவர்கள் மற்றும் அவர்கள் பெற்றுள்ள வசதிவாய்ப்புக்கள் என்பனவும் இவ்வாறான முதியவர்களின் மனதத் ளர்வு நிலையிலிருந்து அவர்களை பாதுகாக்க வழிசெய்யும் என்பதில் ஐய்யமில்லை.

3. சமூகக்காரணிகள்:

நாளாந்தம் சமூகத்தில் முதியவர்கள் எதிர்கொள்கின்ற எதிர்வினைகள் மற்றும் அச்சமூகத்தில்

முதியவர்கள் தொடர்பாக நிலவுகின்ற தவறான கருத்தியல்கள் மற்றும் சிந்தனைகள் என்பனவும் முதியவர்கள் தொடர்பான மோசமான சமூகப் புலப்பார்வையும் அச்சமூகத்திலுள்ள முதியவர்களின் உள ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமின்மைகளில் தாக்கம் செலுத்துவதனைக் காணமுடியும். குறிப்பாக ஒரு சமூகத்திலுள்ள இளைய சமூகம் முதியவர்களின் பால் காட்டுகின்ற கரிசனையும் ஆர்வமும் அதனப் ரிமானமும் அச்சமூகம் முதியவர்கள் தொடர்பாகக் கொண்டிருக்கின்ற அபிப்பிராயத்திலேயே தங்கியுள்ளது எனக்குறிப்பிட முடியும்.

அது மாதிரமன்றி, ஒரு சமூகத்திலுள்ள இளைய தலைமுறையினர்கள் முதியோர்கள் விடயத்தில் முறையாக வழிகாட்டப்படுதல் வேண்டும். இதற்காக பல்வேறு முறையான நேர் சிந்தனைகளை அவர்களில் விதைக்கக் கூடிய முன்னுதாரணங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

இவ்வாறான முன்னுதாரணங்களுக்கு வரலாற்றில் இடம்பெற்ற உண்மையான வரவேற்கத்தக்க சம்பவம் ஒன்றினையும் மிக மோசமான சம்பவம் ஒன்றினையும் இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதாகும்.

அந்தவகையில், முதலில வரவேற்கத்தக்க சம்பவமாக பின்வரும் சம்பவம் அமைகின்றது.

அதாவது, மூன்று நபர்கள் பிரயாணம் செய்தார்கள். இதன்போது அவர்கள் ஒரு இரவைக் கழிப்பதற்காக ஒரு குகையினுள் சென்றனர். ஆனால், காலையில் அவர்கள் அக்குகையிலிருந்து வெளியே வரமுயன்றனர். இதன்போது அந்தக் குகையினுடைய வாயிலை திடீரென ஒரு பாரிய கல்லொன்று உருண்டோடி வந்து அடைத்துக்கொண்டது. பின்னர் அவர்களால் அவற்றை விட்டு வர முயன்றும் முடியாது உள்ளே அடைபட்டுக் கிடந்தனர். செய்வதறியாத இவர்கள் மூவரும் ஒரு தீர்மானத்திற்கு வந்தனர். அதாவது, தாங்கள் ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இடம்பெற்ற நல்ல செயல்களைச் சொல்லி இறைவனிடம் முறையிட்டு இறைஞ்சுவதுடன், இவற்றிலிருந்து வெளியேற வழியேற்படுத்தும்படி இறைவனிடம் வேண்டிக் கொள்வதென தீர்மானித்தனர். பின்னர், இவர்கள் தனித்தனியாக இறைஞ்சினர். இவர்களில் மூன்றாமவர் பின்வருமாறு இறைஞ்சினார்.


அதாவது, என் இறைவனே! நான் எனது வாழ் நாளில் தினமும் எனது வயது முதிர்ந்த தாயையும் தகப்பனையும் பராமரிப்பதற்காக வேண்டி, ஒட்டகையில் பால் கரந்து கொண்டுசென்று அவர்களுக்கு அருந்தக் கொடுத்த பின்னர்தான் எனது குடும்பத்தவர்களுக்கு கொடுப்பது வழக்கம். இதன்போது ஒரு நாள் நான் பாலைக் கறந்து கொண்டு சென்ற போது அவர்களிருவரும் தூக்கத்தில் இருந்தனர். அப்போது எனது குழந்தைகள் பசியால் அழுது கொண்டிருந்தது. அவர்களிருவரும் விழித்தெழும் வரை காத்திருந்து அவர்களுக்கு பாலை அருந்தக் கொடுத்த பின்னரே எனது பிள்ளைகளின் பசியைப் போக்கினேன். இதனை நீ ஏற்றுக்கொண்டு இவ்வின்னலில் இருந்து எம்மை விடுதலை பெறச்செய்வாயாக என்றார். அப்போது அக்கல்லானது முழுமையாக விலகி வழிவிட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் வெளியேறி வந்தனர்.

அடுத்ததாக, வரலாற்றில் இடம்பெற்ற உண்மையான மிக மோசமான பின்வரும் சம்பவம் அமைகின்றது.

அதாவது, ஒரு நபர் தனது வயது முதிர்ந்த தாயை ஒரு ஒதுக்குப் புறத்தில் வைத்து பராமரித்து வந்தார். அவருக்கு தினமும் சாப்பாடு வழங்குவதற்காக ஒரு மோசமான பாத்திரத்தில் உணவை எடுத்துக்கொண்டு தனது இளைய மகனுடன் சென்று அச்சாப்பாட்டினை அத்தாய்க்கு மிருகங்களுக்கு வைப்பது போன்று வைத்து விட்டு, அவர் உண்ட பின்னர் அப்பாத்திரத்தை பாதுகாப்பாக எடுத்து வந்து மீண்டும் வழமைபோன்று உணவு வழங்கச் செல்வார். இதனைத் தொடர்ந்து அவதானித்து வந்த அவரது மகன் ஒரு நாள் அதனை எடுத்து ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளார். இதனை அவதானி;த்த இவர் உடனே மகனே! அதனை ஏன் அவ்வாறு வைக்கின்றீர்? எனக் கேட்டபோது, அச்சிறிய பிள்ளை சொன்னான், தந்தையே! உங்களது தாய் மரணித்த பின்னர், நீங்களும் உங்களது தாயின் நிலையைப் போன்று ஒரு காலத்தில் அடைவீர்கள். அப்போது, நீங்கள் உங்களது தாய்க்கு உணவு வைத்தமாதிரி நானும் உங்களுக்கு உணவு வைக்க வேண்டுமல்லவா? அதற்காகத் தான் அதே பாத்திரத்தை இப்போது நான் பாதுகாப்பாக வைக்க முனைகின்றேன் என்றான்.

இதனைக் கேட்டதும் அந்நபர் கடுமையான அதிர்ச்சிக்குள்ளாகி தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு வாழ்ந்தார்.

இவ்வாறான சம்பவங்கள், தற்போதுள்ள சமூகங்களுக்கும் அதிலுள்ள இளைய தலைமுறையினருக்கும், அவர்கள் கொண்டுள்ள முதியோர்கள் பற்றிய நிலைப்பாடுகளில் காத்திரமான நேரான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

4. மதகலாசாரக்காரணிகள்:

அடுத்து, ஒரு சமூகம் கடைப்பிடிக்கின்ற மதக்கலாசார நம்பிக்கை மற்றும் விழுமியங்களும் அச்சமூகத்திலுள்ள முதியவர்களைப் பாதிக்கின்றது. குறிப்பாக ஒரு மனிதனின் முதுமையான நிலையின்போது அம்மனிதன் நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் மற்றும் அவனுக்குள்ள கடப்பாடுகள் பற்றியும் அவன்பால் அச்சமூகம் கொண்டிருக்க வேண்டிய கடப்பாடுகள் பொறுப்புக்கள் பற்றியும் மார்க்கங்கள் தெளிவான வழிகாட்டலை வழங்கியிருக்கும். இவ்வாறான வழிகாட்டல்கள் கூட முதியவர்களை வழிநடத்துவதில் ஆதிக்கம் செலுத்துவதாக அமைகின்றது. அதாவது, ஒரு முதியவரை பராமரிப்பதில் அவருக்கு உதவுவதில் ஒரு சிறியவர் தொடக்கம், தனிநபர், குடும்பம் மற்றும் சமூகம் என்ற அங்கங்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது பற்றி மார்க்கங்கள் வழிகாட்டியுள்ளன. அவைகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

ஆனால், இன்றைய சு+ழ்நிலையில் ஒரு சமூகத்திலுள்ள முதியவர்கள் ஆரோக்கியமான வழிமுறைகளினுhடாக பராமரிக்கப்படவில்லை அல்லது கௌரவப்படுத்தப்படவில்லை என்றால், அந்த சமூகத்தில் கடைப்பிடிக்கப்படுகின்ற மார்க்கமானது ஒன்றில் அவர்களை முறையாக இவ்விடயத்தில் வழிகாட்டவில்லை அல்லது அம்மார்க்கத்தின் போதனைகள் முறையாக அச்சமூகத்தினரால் பின்பற்றப்படவில்லை என்றே கருதவேண்டியுள்ளது.

ஆனால், இவ்வாறான முதியோர்கள் எதிர்கொள்ளும் வேண்டத்தகாத பிரச்சினைகளும் நிலைமைகளும் மாறவேண்டும். ஏனெனில், ஓரு சமூகம் வளம்பெற வேண்டுமானால், இறைவனின் ஆசீர்வாதம் அவசியமானதாகும். அவனது ஆசீர்வாதம் கிடைக்கப் பெறவேண்டுமானால், அச்சமூகத்திலுள்ள முதியோர்கள் நிம்மதியாகவும் சந்தோசமாகவும் கௌரவத்துடனும் வழிநடாத்தப்படவேண்டும். மேலும் பராமரித்துப் பாதுகாக்கப்படவேண்டும்.

அதுமாத்திரமன்றி, ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கான சகல நகர்வுகளிலும் இம்முதியோர்கள் வளமாகப் பார்க்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள், அபிப்பிராயங்கள் மற்றும் சிந்தனைகள் உள்வாங்கப்பட்டு திட்டங்கள் அமுல்படுத்தப்படவேண்டும்.


முதியோர்களின் உளவளத்தை மேம்படுத்துவதற்கான சில ஆலோசனைகள் வருமாறு:


1. முதியோர்களின் பிரச்சினைகள் கூர்மையாகவும் முறையாகவும் ஆராயப்படல். அந்தவகையில், உடல், உள்ளம், ஆன்மீகம், பொருளாதாரம் மற்றும் அடிப்படைத்தேவைகள் இங்கு கருத்திற்கொள்ளப்படல் வேண்டும். அதனை நிவர்த்திப்பதற்கான முறையான திட்டங்கள் முன்னெடுக்கப்படல். அத்தோடு சகல சந்தர்ப்பங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்குதல் வேண்டும்.

2. அத்தோடு அவர்களது அன்பு, காப்பு, கணிப்பு போன்ற தேவைகளுக்கான தீர்வுகள் முழுமையாகப் பூர்த்தி செய்யப்படல்.

3. முதுமையை எதிர்கொள்வதற்காக வேண்டி அவர்களை முன் கூட்டியே தயார்படுத்துதல் வேண்டும். முதுமையின் வயதெல்லையை எதிர்நோக்குபவர்களை இனங்கண்டு இதற்காக தயார் செய்ய முடியும்.

4. நல்ல, போதுமான ஊட்டச் சத்துள்ள உணவுகளை அவர்களுக்கு தவறாது வழங்குதல் வேண்டும்.

5. நல்ல பொழுது போக்கு அம்சங்களை ஏற்படுத்திக கொடுத்தல். மற்றும் அவர்களது தனிமையை போக்க வழிசெய்தல்.

6. அவர்களது கருத்துக்களுக்கு செவிசாய்தது; மதிப்பளித்தல். அவர்களது உணர்வுகளை மதித்து அவர்களது ஆலோசனைகளை கேட்டு நடத்தல்.

7. தியானம் மற்றும் பொருத்தமான உடற்பயிற்சிகளில் நாளாந்தம ஈடுபட வழிகாட்டுதல்.

8. ஆத்மீகம் சார்ந்த நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடத் துhண்டுதல்.

9. அவர்களை சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் ஈடுபட ஏற்பாடு செய்தல்.

10. மதுபானம் மற்றும் புகைத்தல் போன்ற கெட்ட பழக்கங்களிலிருந்து விடுபட வழிகாட்டுதல்.

11. நோய் நிலைமைகளின் போது முறையான சிகிச்சைகளைப் பெற்றுக் கொடுத்தல்.

12. இம்முதுமைக் காலத்தில் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பொருத்தமான வழிமுறைகளின் கீழ் அவர்களை விழிப்பூட்டுதல்.


எனவே முதியோர்கள் சமூகத்தில் இன்றியமையாத ஒரு அங்கமாகும். அந்தவகையில் அவர்களது பிரச்சினைகளும் தேவைகளும் முறையாக குடும்பங்களினாலும் சமூகத்தினாலும் கையாழப்படல் வேண்டும். குறிப்பாக அவர்களது ஆரோக்கியத்திலும் சீவியத்திலும் ஆதிக்கம் செலுத்துகின்ற உளம் வளமானதாக அவர்களது மரணம் வரை இருப்பதற்கு காத்திரமான வழிமுறைகள்  ஏற்படுத்திக்கொடுக்கப்படல் வேண்டும்.

உசாத்துணை:

  • சா. சிவயோகன், தயா சோமசுந்தரம் (2001), “முதுமை” , சாந்திகம்- யாழ்ப்பாணம். பக்கம்: 01-85.
  • சா. சிவயோகன், தயா சோமசுந்தரம் (2004), “தமிழர் சமுதாயத்தில் உளநலம்” , சாந்திகம்- யாழ்ப்பாணம். பக்கம்: 191-203

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...

0 Comments