ஒரு தனிமனிதனுடைய உருவாக்கத்தின் பின்புலமாகவும் ஒரு சமுதாயத்தினுடைய அத்திவாரமாகவும் அமைகின்ற இந்தக் குடும்பம் என்ற சமூக நிறுவனமானது இன்று இலங்கைச் சூழலைப் பொறுத்தவரையில் ஒரு திருமணப் பந்தத்தின் மூலமாகவே உருவாக்கம் பெறுகின்றது.
இந்தக் குடும்பம் தொடர்பாக சமூகவியலாளர்களும் உளவியலாளர்களும் தங்களது நிலைசார்ந்த வரைவிலக்கணங்களை முன்வைத்துள்ளனர்.
அந்தவகையில்,நிலையான பிணைப்பின் மூலம் ஒன்றுபட்ட ஓர் ஆண்-பெண், அவர்களது குழந்தை அல்லது குழந்தைகள் ஆகியோரை உள்ளடக்கிய குழுமமே குடும்பம் என்பர். என சமூகவியலாளர்கள் குடும்பம் பற்றி வரைவிலக்கணப்படுத்துகின்றனர்.
உளவியலாளர்களின் பார்வையில் குடும்பம் என்பது, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்ட ஆண் - பெண் மற்றும் பிள்ளைகளின் உளப்பிணைப்பே குடும்பம் என்பர்.
இந்தக் குடும்ப வாழ்க்கையானது இன்றுள்ள சமூகச் சூழலில் சிதைவடைந்து வருகின்ற ஒரு கவலையான நிலைமை தோன்றியுள்ளது. இந்த குடும்பத்தின் வாழ்வினைப் பாதிக்கும் காரணிகளாக பல்வேறு விடயங்களை இன்று விளக்கிக் கூறமுடியும். இருந்தாலும் பின்வரும் காரணிகளை இங்கு சுருக்கமாக அடையாளப்படுத்த முனைகின்றேன்.
- கணவன் மனைவி தெரிவில் ஆரோக்கியமான முறைமை பின்பற்றப்படாமை:
- சடரீதியான புறக்கவர்ச்சிகளை தெரிவு நிபந்தனைகளாகக் கொள்ளல்:
இன்று குடும்ப வாழ்வில் இணைந்து கொள்கின்ற கணவன் மற்றும் மனைவி ஆகியோரை தெரிவு செய்கின்ற விடயத்தில் சிறந்த ஆரோக்கியமான முறைமை பின்பற்றப்படாததன் காரணமாக குடும்ப வாழ்க்கையானது பாதிப்படைகின்றது.
இன்று கணவன் அல்லது மனைவியைத் தெரிவு செய்கின்ற விடயத்தில் பின்வரும் சடரீதியான புறக்கவர்ச்சிகளே தெரிவு நிபந்தனைகளாகக் கொள்ளப்படுகின்றன.
- அழகு
- செல்வம்
- செல்வாக்கு
- குடும்பப்பின்னணி
- கல்வியறிவு
- தொழில் வருமானம்
- சமூக அந்தஸ்த்து
இவ்வாறான சடரீதியான புறக்கவர்ச்சிகளானது அழிவடைந்து மருவிச் செல்லக்கூடியதாகும். இவைகளில் ஒன்றை அல்லது பலதை தெரிவு நிபந்தனைகளாகக் கொண்டு தம்பதியினர் தெரிவு இடம்பெறும்போது, காலப்போக்கில் அந்த தெரிவு நிபந்தனைகளில் எதிர்பாராத பின்னடைவு அல்லது வீழ்ச்சி ஏற்படுமாயின் அத்தம்பதியினர்களுடைய குடும்ப வாழ்வு பாதிப்படைகின்றது.
1.2. திருமணத்திற்கு முந்திய காதல் விவகாரம்:
இன்று எல்லா சமூகத்திலும் திருமணத்திற்கு முந்திய காதலானது ஒரு கலாச்சாரமாக மாறுமளவிற்கு பரந்து பெருகியுள்ளது.
இந்தக்காதலானது ஆரம்பத்தில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான ஒரு கவர்ச்சி நிலையில் ஆரம்பித்து, பின்னர் காதலாகி தொடர்ந்து காமத்தில் முடிகின்ற மிக மோசமான நிலைமைக்கு இன்று வந்துள்ளது.
இவ்வாறான திருமணத்திற்கு முந்திய காதலால் ஏற்படும் சுமார் 75மூ காதல் திருமணங்கள் தோல்வியில் முடிவடைவதாக இன்று சமூக உளவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த திருமணத் தோல்வியானது காலப்போக்கில் மனச்சோர்வு, விரக்தி என்ற நிலைமைக்கு தம்பதியினர்களின் குடும்ப வாழ்க்கையைப் பாதித்து இறுதியாக தற்கொலை என்ற நிலைமைக்கு இட்டுச் சென்றுள்ளது.
1.3. பெற்றோரின் ஒரு தலைப்பட்சமான தலையீடு:
குடும்ப வாழ்க்கைக்கு தம்பதியினர்களை தயார்படுத்துகின்ற விடயத்தில் பெற்றோர்களின் தலையீட்டினைப் புறக்கணிக்க முடியாது. ஆனால், தம்பதியினர் தெரிவு விடயத்தில் குறித்த தம்பதியினர்களுடைய விருப்பங்களையும் எதிர்பார்ப்புக்களையும் கவனத்திற் கொள்ளாது கணக்கெடுக்காது, பெற்றோர்களினது ஆதிக்கத்தின் அடிப்படையில் அவர்களின் வற்புறுத்தலின் பிரகாரம் குடும்ப வாழ்க்கையில் இணைகின்ற குடும்பங்கள் பிரச்சினைகளுக்குள்ளாகி காலப்போக்கில் மணமுறிவில் முடிவதனைக் காணலாம்.
1.4. பொருத்தப்பாடு:
குடும்ப வாழ்க்கையில் இணைவதற்கு முன்னராக ஆண் பெண் தெரிவில் சில விடயங்களை மைய்யப்படுத்தி பொருத்தம் பார்க்கப்படுவது இன்றியமையாததொன்றாக அமைகின்றது. அந்தவகையில், பின்வரும் விடயங்கள் பொருத்தம் பார்ப்பதில் தாக்கம் செலுத்துகின்றன.
o வயது இடைவெளி.
o குடும்பப் பின்னணி
o பொருளாதாரப் பின்புலம்
o இரத்த உறவு
o வாழ்விடம்
o நகர கிராம வேறுபாடுகள்
திருமணத்தின் போது தம்பதியினர்களுக்கிடையில் மேலுள்ள விடயங்களில் பொருத்தம் பார்க்கப்பட்டு ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாத பட்சத்தில் குடும்ப வாழ்க்கையானது பாதிப்படைகின்றது.
உதாரணமாக: தம்பதியினர்களது வயதைப் பொறுத்தவரை, குறைந்தது ஆணுக்கும் பெண்ணிற்கும் இடையிலான வித்தியாசம் 07 வருடங்களாகவிருப்பது பொருத்தமானதாகும் என உளசமூகவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வாறான விடயங்களை தம்பதியினர்களும் அவர்கள் சார்ந் குடும்பங்களும் விளங்கிக் கொள்வதன் மூலம் தம்பதியனர்களுடைய பின்னணி, தனியாள் வேறுபாடு, வகிபாகம், மனோபாவம், நடத்தைக் கோலம் என்பனவற்றை புரிந்து கொள்ளலாம். இவ்வாறான புரிதல்களில்லாத பட்சத்தில் குடும்ப வாழ்வில் விரிசல்கள் தோன்றுவதனை தவிர்க்க முடியாது.
2. குடும்ப வாழ்வு பற்றிய சரியான புரிதலில்லை:
குடும்ப வாழ்வு பற்றிய சரியான புரிதல், விளக்கமில்லாத தன்மை தம்பதியினர் மத்தியில் நிலவுமானால் அக்குடும்பத்தின் வாழ்வு அர்த்தமற்ற ஒன்றாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
பெரும்பாலும் பொதுவாக திருமணத்தின் மூலமாக ஏற்படும் ஒரு குடும்ப வாழ்வின் எதிர்பார்ப்புக்களாக பின்வரும் அம்சங்கள் எட்டப்படல் வேண்டும்.
மன அமைதி
பாலூக்கத்தேவை – ஒழுக்கம் பேணுதல்
மறு உற்பத்தி – சந்ததி உருவாக்கம்
சமூகப் பாதுகாப்பு
பெண்களுக்கான பாதுகாப்பு
மூப்பின்போது உதவி
நட்புத்தேவை
பெயரையும் பொருளையும் விட்டுச் செல்லல்
இவ்வாறான எதிர்பார்ப்புக்களும் நோக்கங்களும் எட்டப்படவில்லையானால் அக்குடும்ப வாழ்வானது பாதிப்பினை எதிர்நோக்கும்.
3. புரிந்துர்ணவற்ற வாழ்கைப் போக்கு:
குடும்ப வாழ்வினைப் பாதிக்கின்ற காரணிகளில் மிகவும் முக்கியமான ஒன்றுதான், தம்பதியினர்களுக்கிடையில் ஏற்ப்படுகின்ற புரிந்துணர்வற்ற நிலையாகும். இந்த புரிந்துணர்வானது தனிநபர்களின் உடல் உள வேறுபாடுகள், ஆசைகள், விருப்பு வெறுப்புக்கள், எதிர்பார்ப்புக்கள், மனப்பாங்குகள், பழக்கவழக்கங்கள், அறிவுமட்டங்கள், கல்விப்பின்னணிகள், பலம் பலவீனங்கள், பின்புலங்கள், உணர்வுகள் போன்ற பல விடயங்களில் கணவன் மனைவியையும் மனைவி கணவனையும் புரிந்து கொள்கின்ற நிலைமையில்தான் ஏற்ப்படும்.
மேலும், குடும்ப வாழ்வில் உரிமைகள் கடமைகள் பற்றிய புரிதல் கணவன் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு இருத்தல் வேண்டும். கணவன் மனைவிக்கு செய்ய வேண்டியவைகள், மனைவி கணவனுக்கு செய்ய வேண்டியவைகள் மற்றும் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கும் செய்ய வேண்டிய உரிமைகள் கடமைகள் விடயத்தில் சரியான புரிந்துணர்வு அவசியமானதாகும்.
அதேபோல, குடும்ப வாழ்வில் சுதந்திரமில்லாத, நெகிழ்ச்சியற்ற நிலை கூட குடும்ப வாழ்வினைப் பாதிக்கின்றது. குறிப்பாக கணவன் மனைவி விடயத்தில் அடக்கியாழுகின்ற சர்வதிகாரமான போக்கும் குடும்பத்தைப் பாதிக்கும். இந்த விடயத்தில் கணவன் மனைவிக்கு மத்தியில் சரியான உடப்பாட்டுடனான நெகிழ்ச்சித்தன்மை அவசியமானதாகும். இவ்வாறான விடயங்களில் இருவரும் மனம்விட்டுப் பேசுதல் வேண்டும்.
இவ்வாறான விடயங்களில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் வாழ்வதும் காலப் போக்கில் குடும்ப வாழ்வினைப் பாதிக்கும்.
குடும்ப வாழ்வில் உருவாக்கப்படவேண்டிய புரிந்துணர்வில் அடிப்படையானதுதான் ஆண் பெண் என்ற பாலடிப்படையிலான வேறுபாட்டினை புரிந்து கொள்வதாகும்.
ஆண் பெண் வேறுபாடுகள்:
| ஆண் | பெண் |
| உடலியல் வேறுபாடுகள்: | |
குரோமசோம்கள்: உயிருள்ள ஒரு கலத்தின் கருவில் காணப்படும் ஒருவகைப் புரோட்டின் பொருளாகும். அது பாரம்பரியப் பண்புகளைத் தன்னிலே காத்து வைத்துள்ளது. ஒரு கலத்தில் காணப்படும் குரோமசோம்களின் எண்ணிக்கை – 46 ஆகும். இதில் 44 சோடிகளாக அமையப்பெற்றிருக்கும். பின்னால் தோன்றப்போகும் மனிதனின் படைப்பு, அமைப்பு அனைத்து விடயங்களுக்கும் இவையே பொறுப்பாகும். இதில் கடைசிச் சோடி மாத்திரம் வித்தியாசமாகவிருக்கும். இதன் மூலமே குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பது தீர்மானிக்கப்படும். குரோமசோம் ஓஓ ஆகவிருந்தால் குழந்தை பெண்ணாகவும், குரோமசோம் ஓலு ஆகவிருந்தால் குழந்தை ஆணாகவும் உருவாகும். | |
| மூளை: சிந்திக்கின்ற, அதனடியாக செயற்படுகின்ற விதத்தில் ஆணும் பெண்ணும் வேறுபடுவர். | |
ஹோமோன்களின் வேறுபாடு: பெண்ணில் - ஈஸ்ரஜன், புரோஜெஸ்ரோன் (பிள்ளைப் பேறுக்கானது) ஆகிய ஹோமோன்கள் உருவாகும். இவை மாதவிடாய் ஏற்ப்படல். துணைப் பாலியல்புகளைத் தூண்டுதல் போன்வற்றிற்கு காரணமாகும். ஆணில் - அன்ட்N;ராஜன், டெஸ்ரொஸ்திரோன் ஆகிய ஹோமோன்கள் உருவாகும். இவை சில இடங்களில் மயிர் முளைத்தல், குரலமைப்பு என்பன ஏற்ப்படக் காரணமாகும். | |
உடற்கட்டமைப்பு: இதனை இரு பாலாரிலும் அவதானிப்பதன் மூலமாக இவ்வேறுபாட்டைப் புரிந்து கொள்ளலாம். | |
உளவியல் வேறுபாடுகள்: | |
| தோல்விக்குப் பயப்படுதல் அதனால் விரக்தியடைதல் | ஏற்க்கப்படாமைக்கு அஞ்சுதல். அதாவது தன்னை யாரும் விரும்பவில்லையோ என எண்ணி பயப்படுதல். |
| செவ்வாய்க் கிரகத்தைச் சேர்ந்தவர் | வெள்ளிக் கிரகத்தைச் சேர்ந்தவர் |
| பிரச்சினைக்கு தீர்வு சொல்தல் | உபதேசம் செய்தல் |
| அழுத்தங்களின் போது தனிமையையும் அமைதியையும் நாடுதல் | அழுத்தங்களின் போது பேசுவதையும் பிறர் கவனிப்பதையும் எதிர்பார்த்தல் |
| முதன்மையான தேவைகள் | |
| நம்பிக்கை வைத்தல் (வுசரளவ) ஏற்றல் (யுஉஉநிவயnஉந) மதிப்பளித்தல் (யுppசநஉயைவழைn) மெச்சுதல், பாராட்டுதல் (யுனஅசையவழைn) அங்கீகாரம் வழங்குதல் (யுppசழஎயட) உட்சாகமூட்டல், தைரியமூட்டல் (நுnஉழரசயபநஅநவெ) | அக்கரை செலுத்துதல் (ஊயசiபெ) புரிதல் (ருனெநசளவயனெiபெ) மரியாதை கொடுத்தல் (சுநளிநஉவ) முதன்மைப்படுத்தல்; (னுநஎழவழைn) உறுதிசெய்தல்; (ஏயடனையவழைn) மீண்டும் மீண்டும் உறுதி செய்தல்; (சுநயளளரசயnஉந) |
4. அன்பு குறைவடைதல்:
குடும்ப வாழ்வின் அடிப்படையே அன்புதான். கணவன் மற்றும் மனைவி ஆகியோருக்கிடையில் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளப்படும் இந்த அன்பின் வலுவான பிணைப்புத்தான் அவர்களது குடும்ப வாழ்வின் முடிவுக்காலத்தை தீர்மானிக்கின்றது.
தம்பதியினர்கள் மத்தியில் காணப்படும் வெளிப்பிடைத்தன்மை, புரிந்துணர்வு, தேவையை நிறைவுnய்தல், பாலூக்கத்திருப்தி போன்ற காரணிகள் மேலும் மேலும் இவ்வன்பினை அவர்களுக்கு மத்தியில் அதிகரிக்கின்றன.
இவ்வாறான அன்பில் சரிவு அல்லது குறைவு ஏற்ப்படுமாக இருந்தாலும், அது குடும்ப வாழ்வினைப் பாதிக்கும்.
5. பொருளாதாரம் - நிதியைத் திட்டமிடாமை:
குடும்ப வாழ்வின் சந்தோஸத்தை தீர்மானிக்கின்ற முக்கியமான காரணிகளில் அக்குடும்பத்தின் பொருளாதார முகாமைத்துவம் காணப்படுகின்றது.
குறிப்பாக, குடும்பத்தின் நிதியை முறையாகத் திட்டமிட்டு முகாமை செய்கின்ற குடும்பங்களில் முரண்பாடுகள் குறைவாகவே இருக்கும். வரவுக்கேற்ற செலவினங்களை கணவனும் மனைவியும் சேர்ந்து முறையாக மாதாந்தம் திட்டமிட்டு, குடும்பத்தின் செலவினங்களானது வரவினை மிஞ்சாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். ஆசைகளை விட தேவைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை கொடுத்து செலவினங்களை மேற்கொள்ளல் வேண்டும். இதில் ஒரு குடும்பத்தின் முகாமையாளராக செயற்படும் மனைவிக்கு பெரிய பொறுப்புள்ளது.
“எழுதா வாழ்வு கழுதையின் வாழ்வு” என்பர். அந்தடிப்படையில், குடும்பத்தினுடைய சகல வரவுகளையும் செலவினங்களையும் ஒரு பதிவுப் புத்தகத்தில் குறிப்பு வைத்துக் கொண்டு, வருமானத்தின் ஒரு பகுதியை சேமிப்பாக கடைப்பிடிக்கின்ற குடும்பத்தில் சந்தோஸமும் ஊக்கமும் அதிகரிக்கும். இவ்வாறானவர்கள் தங்களது குடும்பத்தின் வாராந்த, மாதாந்த மற்றும் வருடாந்த செயற்பாடுகளை முறையாகத் திட்டமிட்டுக் கொள்ளமுடியும்.
அடுத்தது, இன்று பல குடும்பங்களின் நிம்மதியை சந்தோசத்தைக் கெடுத்துள்ள விடயமாக கடன் மாறியுள்ளது. கடன்களை வட்டியுடன் வழங்குவதற்காக பல்வேறு வங்கிகளும் கம்பனிகளும் மலிந்து கிடக்கின்றன. இதனால் கடன் சுமைக்கு குடும்பங்கள் ஆட்பட்டு அதிலிருந்து மீள முடியாது பல போராட்டங்களை நாளாந்தம் சந்திக்கின்றன.
குடும்பத்திற்கான வருமான மூலங்களைப் பொறுத்தவரையில், அறம்சார்ந்த விழுமியங்களுக்குப் புறம்பானதாக இருப்பது ஆரோக்கியமான குடும்ப வாழ்விற்கு துணையாக அமையாது. உதாரணமாக, இலஞ்சம், ஊழல், மோசடி மூலமாக வருமானமீட்டக் கூடாது. இது குடும்பத்தின் அமைதியைக் கெடுக்கும்.
வரவுக்கேற்ப்ப செலவினங்களை முகாமை செய்யத் தெரியாத ஆடம்பரமும் ஊதாரித்தனமும் அதிகரிக்கின்ற தம்பதியினர்களுடைய குடும்ப வாழ்வில் நாளாந்தம் குழப்பங்கள் தோன்றும்.
6. மனவெழுச்சிகள் முறையாக முகாமை செய்யப்படாமை:
ஒவ்வொருவரினதும் மனவெழுச்சிகள் வெவ்வேறு அளவில் வித்தியாசமாக செயற்படும். குடும்ப வாழ்க்கையில் இணைந்துள்ள கணவன் மனைவி ஆகியோருக்கிடையில் நேரானதும் மறையானதுமான மனவெழுச்சிகள் தோன்றும். மனவெழுச்சிகளை சமனிலையாகப் பேணாமையும் உளவியல் பலவீனங்களும் இன்று குடும்பத்தில் பல பிரச்சினைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. இவ்வாறான மனவெழுச்சிகளை முறையாக முகாமை செய்யாத பட்சத்தில் குடும்ப வாழ்வில் முரண்பாடுகள் தோன்றும்.
மகிழ்ச்சி, அன்பு, பொறுமை, நிதானம், சிரிப்பு, கீழ்ப்படிவு, நம்பிக்கை, திருப்தி, தியானம், மற்றும் ஆச்சரியம் போன்ற நேரான மனவெழுச்சிகளும், மறையான மனவெழுச்சிகளான பயம், கோபம், வெறுப்பு, அலட்சியம், அழுதல், எரிச்சல், பதற்றம், அவநம்பிக்கை, விரக்தி, பொறாமை, குழப்பம், குற்றவுணர்வு போன்ற மனவெழுச்சிகளும் தோன்றும்.
மறையான மனவெழுச்சிகள் அளவுக்கு மீறி செயற்பட்டால் பிரச்சினைகள் தோன்றும். மறையான மனவெழுச்சி நிலைகளின் போது தம்பதிகள் பொறுமையைக் கடைப்பிடித்தல் அவசியமானதாகும். தம்பதியினர்கள் மத்தியிலான பொறுமை என்ற உயர்குணம் கடைப்பிடிக்கப்படவில்லை என்றால், அக்குடும்பத்தின் வாழ்வு முறிந்துவிடும்.
மனவெழுச்சிகளில் குறிப்பாக கோபத்தை முறையாக முகாமைசெய்ய வேண்டும். கோபம் வருகின்ற போது அதனை அறிவார்ந்த ரீதியில் கையாழ்கின்ற நிலைமையை விடுத்து, அறிவார்ந்த நிலைமையைக் கோபம் கட்டுப்படுத்தும் நிலைமைக்கு ஆளாகி கோபத்திற்கு அடிமையாகி பல்வேறு விபரீதங்கள் குடும்ப வாழ்வில் நிகழ்வதனைக் காணமுடியும்.
எனவே, எவரது குடும்ப வாழ்க்கையில் தம்பதியினர் மத்தியில் கோபம் தோன்றுகின்ற போது அதனை அறிவுரீதியாக கையாழவில்லையோ அங்கு குடும்ப வாழ்வு கசந்து போகின்ற சந்தோசமில்லாத நிலைமை தோன்றுவதனை தவிர்க்க முடியாது.
இன்றைய இயந்திரமயமான உலக ஒழுங்கில் ஒரு குடும்பத்திலுள்ள அங்கத்தவர்களது ஓய்வுகாலங்களை முறையாக திட்டமிட்டுப் பயன்படுத்தி ஓய்வைப் பெற்றுக்கொள்வதும் ஒருவரது மனவெழுச்சியை மற்றவர் புரிந்து கொண்டு செயல்பட முனைவதும் மனவெழுச்சிகளை முறையாக முகாமை செய்வதற்கு அவசியம் தேவைப்படுகின்றது.
7. சந்தேகம்:
குடும்பவாழ்வில் விரிசல்களும் பிரச்சினைகளும் ஏற்ப்படுவதற்கு காரணமாக இருக்கின்ற மிக முக்கியமான காரணி சந்தேகப்படுதலாகும். கணவன் மனைவியை சந்தேகப்படுதலும் மனைவி கணவனை சந்தேகப்படுதலுமாகும். சந்தேகப்படுகின்ற தம்பதிகளையுடைய குடும்பங்களில் சந்தோசமானது தொலைந்து போகும் என்பது மிக யதார்த்தமான அம்சமாகும்.
இந்த சந்தேகமானது தம்பதிகளில் ஒருவர் சந்தேகமுடைய ஆளுமையைக் கொண்டிருத்தல், அல்லது அவர்களது பெற்றோர் அவ்வாறான உணர்வினை கொண்டிருத்தல் போன்றனவற்றாலும், தம்பதிகளில் யாராவது வெளிப்படைத்தன்மையற்ற நடத்தைகளைக் கொண்டிருத்தல் போன்றனவற்றாலும், தம்பதிகளில் யாராவது போதைவஷ்த்துப் பாவனைக்கு ஆட்பட்டிருப்பதனாலும் குடும்ப வாழ்வில் சந்தேகம் தோன்றி குடும்பத்தில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும்.
8. தாம்பத்திய உறவில் திருப்தியில்லாத நிலை:
தாம்பத்திய உறவினை வெற்றிகரமானதாக அமைப்பதற்கு கணவனும் மனைவியும் மன ஒருமைப்பாட்டுடனும் விருப்பத்துடனும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டவராகவும் ஒருவரது ஆசையையும் விருப்பத்தையும் மற்றவர் ஏற்றுக் கொண்டும் ஈடுபடல் வேண்டும். இதில் சமூகத்தில் காணப்படும் புனைதலான கருத்துக்களையும் சில காணொளிகளில் காண்பிக்கப்படும் மாயமான பிம்பங்களையும் நம்பி ஏமாந்து விடக்கூடாது.
இன்று கணவன் அல்லது மனைவி குடும்ப வாழ்வில் அடைய எதிர்பார்க்கின்ற பாலியல் ரீதியிலான பாலூக்கத் தேவையை திருப்திகரமான முறையில் அடைய முடியாத போது, திருப்தியற்ற தாம்பத்தியம் உருவாகும் சந்தர்ப்பத்தில் அதனை தவறான இன்னுமொரு வழியில் இன்னுமொருவரிடமிருந்து அடைய எதிர்பார்க்கின்ற நிலைமை காணப்படுகின்றது. இதனால், திருமணத்தின் மூலமாக அடையப்பெற எதிர்பார்க்கின்ற ஆண் பெண் கர்ப்பொழுக்கம் பேணுதல் என்ற நிலை இல்லாமல் செய்யப்படுகின்றது.
அடுத்து, இந்தவிடயத்தில் இடம்பெறும் குறிப்பாக கணவனின் முறையற்ற மோசமான அணுகுமுறையினால் மனைவி தாம்பத்திய உறவில் நாட்டமடையாது விலகிச் செல்லும் நிலையுள்ளது. அதிலும் போதைக்கு அடிமையான கணவன் தனது மனைவியை மிருகத்தின் சாயலில் அணுகுவதை பாலியல் வதையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
இதனால் குடும்பங்களில் சந்தேகங்கள் உருவாகி, விரிசல்கள் ஏற்ப்பட்டு, குடும்ப வாழ்வானது பிரச்சினைகளில் மூழ்கியுள்ளதனை அவதானிக்க முடியும்.
9. வன்முறையான தொடர்பாடல்:
கணவன் மனைவிக்கு இடையில் மனம் விட்டுப் பேசுகின்ற நிலைமை மிக முக்கியமானதாகும். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கணவனும் மனைவியும் தங்களது குடும்ப விவகாரங்கள் தொடர்பாகவும், தங்களுக்கிருக்கின்ற எதிர்பார்ப்புக்கள், ஆசைகள், விருப்பங்கள் விருப்பமின்மைகள் தொடர்பாகவும் மனம்திறந்து தங்களுக்குள் பேசுவதற்கான சந்தர்ப்பங்களை தினமும் ஒதுக்கிக் கொள்ளல் வேண்டும். இவ்வாறான உரையாடல்களின் போது வன்முறையற்ற சொற்பிரயோகங்களை இருவரும் கையாழ்வதை தவிர்ப்பதால் பிரச்சினைகளை தவிர்க்க வழிகோலும்.
அதேபோன்று, ஒருவர் பேசும் போது மற்றவர் மனம் திறந்து, குறுக்கிடாமல், காது தாழ்த்தி செவிமடுத்தல் வேண்டும். அதற்கான சந்தர்ப்பங்களையும் மனநிலைளையும் உருவாக்கிக் கொள்ளல் வேண்டும்.
ஆனால், இந்த வன்முறையான தொடர்பாடலில் பிரயோகிக்கப்படும் வார்த்தைப் பிரயோகங்கள், தொணியின் அதிகரித்த அளவு, சமயோசிதமற்ற நிலை என்பன அடுத்தவரை உளரீதியாகக் காயப்படுத்தும் நிலைமையை தோற்றுவிக்கும். இன்று பல குடும்பங்களின் உடைவிற்கு வன்முறையான தொடர்பாடல் காரணமாக அமைந்துள்ளது.
10. வேலைப்பழு:
இன்று கணவன் அல்லது மனைவி அல்லது இருவரும் ஏதோ ஒரு வகையில் தொழில் புரிகின்ற சந்தர்ப்பங்கள் சமூகத்தளத்திலுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் தொழிலில் ஈடுபடுபவர்கள் மன அழுத்தங்களுடன் வீடு வந்தடைவர். இவ்வாறானவர்களது நிலைமைகளை கவனத்திற் கொள்ளாது அவர்களது உடல் மற்றும் அன அசௌகரிகங்களை கவனத்திற் கொள்ளாது செயற்பட முனைந்தால், குடும்ப சூழலில் பிரச்சினைகள் தோன்றும்.
11. உறவுகளைக் கவனிக்காமை:
கணவனது உறவுகள் அல்லது மனைவியினது உறவுகள் வீட்டிற்கு வருகை தருகின்ற சந்தர்ப்பங்களில், அவர்களை கவனிக்கின்ற விடயத்தில் பாரபட்சமாக நடத்தல் அல்லது அவர்களை குறைகாணுகின்ற விடயத்தில் செயற்படல். இவ்வாறான நடவடிக்கைகளில் யாராவது ஒருவர் செயற்படுவாரானால் பல பிரச்சினைகள் குடும்ப சூழலில் தலைதூக்கும்.
12. மறத்தல் - மன்னித்தல்:
வித்தியாசமான பின்புலங்களையும் மனோநிலைகளையும் இயல்புகளையும் கொண்ட இருவர் குடும்ப வாழ்வில் இணைந்து வாழ்கின்ற போது பல முரண்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் தலைதூக்குவதனை தவிர்க்க முடியாது. இவ்வாறான முரண்பாடான நிலைமைகளில் சரியான முரண்பாட்டு முகாமைத்துவம் ஒன்றினை தம்பதிகள் இணைந்து மேற்க்கொள்ளல் வெண்டும். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்பும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியமானதாகும்.
இவ்விடயத்தில் ஒருவர் விடுகின்ற தப்புக்களையும் தவறுகளையும் மன்னித்து மறக்கின்ற தன்மையும் இயல்பும் தம்பதிகளில் ஏற்ப்படவில்லையானால் பல உளரீதியிலான தாக்கங்கள் தம்பதிகளில் ஏற்பட்டு அக்குடும்பத்தின் வாழ்வானது பாதிப்படையும்.
13. உடல் உளப் பாதிப்புக்கள்:
ஒரு குடும்பத்தினுடைய தம்பதிகளினுடைய ஆரோக்கியமான வாழ்க்கையானது அக்குடும்பத்தின் மகிழ்;ச்சியை தீர்மானிக்கின்ற சக்தியாகவும் உள்ளது. தம்பதிகளில் ஒருவர் அல்லது இருவர் அல்லது அக்குடும்பத்தின் பிள்ளைகளுக்கு நோய்கள் ஏற்ப்படுமானால் அதுவும் அக்குடும்பத்தின் வாழ்வை அதன் நிம்மதியை சந்தோஸத்தைப் பாதிக்கின்றது.
உலக சுகாதார நிறுவனத்தின் வரையின்படி, ஒரு நபரின் முழுமையான சுகம் என்பது உடல், உளம், ஆன்மீக ஈடுபாடு மற்றும் சமூகப் பொருத்தப்பாடு ஆகிய 04 விடயங்களில் தங்கியுள்ளது. இவ்வாறான விடயங்களில் முழுமையான கவனம் செலுத்தி குடும்ப வாழ்வை பாதுகாக்க தம்பதிகள் முயற்சிக்க வேண்டும்.
இன்று தொற்றா நோய்களின் பாதிப்பும் உளரீதியான பாதிப்பும் குடும்பங்களில் அதிகரித்துள்ளன. இவ்வாறான விடயங்களும் குடும்ப வாழ்வைப் பாதித்துள்ளது.
14. பிள்ளை வளர்ப்பு பற்றிய போதிய விளக்கமின்மை:
குடும்ப வாழ்வைப் பாதிக்கின்ற இன்னுமொரு விடயம்தான் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் தம்பதியினர் மத்தியில் காணப்படும் விளக்கமின்மைகளாகும். குடும்ப வாழ்வின் மூலமாக அடையும் எதிர்பார்ப்புக்களில் ஒன்றுதான் சந்ததிகளை உருவாக்குதல். இந்த சந்ததிகளை உருவாக்கும் விடயத்தில் தம்பதியினர் மத்தியில் முரண்பட்ட புரிதல் காணப்படுமானால் பிரச்சினைகள் தோன்றும். அதாவது, பிள்ளை வளர்க்கின்ற விடயத்தில் மனைவிக்குள்ள கடமையை உதாசீனம் செய்வதும் கணவன் பொறுப்பற்ற விதத்தில் மனைவிக்கு ஒத்துழைப்பு வழங்காது நடப்பதும் பிரச்சினையை தோற்றுவிக்கும்.
ஒரு பிள்ளையை பெற்று வளர்க்கின்ற விடயம் பாரிய பொறுப்புமிக்கதாகும். அந்தடிப்படையில் ஒரு பிள்ளையை வளர்க்கும் விடயத்தில் அப்பிள்ளையின் வளர்;ச்ச்p மற்றும் விருத்தி பற்றிய சரியான விளக்கம் தம்பதிக்கு இருத்தல் வேண்டும்.
குறிப்பாக ஒரு பிள்ளையின் குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம், பதின்ம பருவம் மற்றும் கட்டிளமைப்பருவம் போன்ற பருவங்களில் ஒரு பிள்ளையில் ஏற்ப்படும் உடல் உளம் சார்ந்த வளர்;ச்சி, விருத்தி என்பனவற்றில் தெளிவான அறிவு பெற்றோருக்கு இருத்தல் அவசியமானதாகும்.
15. பெற்றோரின் ஆதிக்கத் தலையீடு:
இன்று குடும்ப வாழ்வைப் பாதிக்கின்ற மிக முக்கியமான காரணி பெற்றோரின் ஆதிக்கம் நிறைந்த தலையீடாகும். தம்பதியினர் தங்களது குடும்ப வாழ்வினை சுயமாகத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த விடாமல் அடிக்கடி அவர்களது அனைத்து விவகாரங்களையும் தீர்மானிக்கும் சக்தியாக இத்தலையீடுகள் பல குடும்பங்களில் அமைந்துள்ளன.
ஒன்றில் கணவனின் பெற்றோர் அல்லது மனைவியின் பெற்றோர் தம்பதியின் குடும்ப வாழ்வின் இலக்கையும் திசையையும் தீர்மானிப்பர். தம்பதிகள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பெற்றோhரின் ஆதிக்கமுள்ள தலையீட்டுக்கு கட்டுப்பட்டு ஆகவேண்டும் என்ற நிலைமை இன்று பல குடும்பங்களின் விரிசல்களுக்கு காரணமாய் அமைந்துள்ளது.
அதேநேரம், இன்று பல குடும்பங்களில் கணவன் அல்லது மனைவி தங்களது பெற்றோரினது வலியுறுத்தலுக்கமைய அவர்களது கதைகளை மாத்திரம் கேட்டு குடும்ப வாழ்வினை ஓட்டிச் செல்வதனைப் பார்க்க முடியும்.இவ்வாறான குடும்பங்களும் மணமுறிவில் முடிவடைகின்றது.
இவ்வாறான தம்பதிகளை ஆராய்ந்தால், ஒன்றில் அவர் அவரது குடும்பத்தின் கதையைக் கேட்கின்றார் என மனைவியும், அவள் அவளது குடும்பத்தின் கதையைக் கேட்டே எல்லாத்தையும் தீர்மானிக்கின்றாள் என கணவனும் மணமுறிவிற்கான காரணங்களை எடுத்துரைப்பதனைக் காணலாம்.
16. இளவயதில் திருமணம்:
இளவயதில் திருமணம் முடிக்கின்ற பல குடும்பங்கள் மிக விரைவாக இன்று மணமுறிவை நோக்கிச் செல்லும் நிலை அதிகரித்துள்ளது. இளவயதினையுடைய தம்பதிகள் ஏதாவது ஒரு கவர்;ச்சி நிலைக்குள் உந்தப்பட்டு திருமணம் செய்யும் முடிவை எடுத்தாலும், காலப்போக்கில் அந்தக் கவர்ச்சி நிலையானது மங்கிச் செல்லும் நிலை தோன்றின் குடும்ப வாழ்வும் அமங்கலமாக மாறும் கவலையான நிலைமை உருவெடுத்துள்ளது.
இளவதில் திருமணம் முடிக்கும் தம்பதிகளுக்கு மத்தியில் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, சகிப்புத்தன்மை, பொறுப்புணர்வு என்ற மனநிலைகள் எதிர்பார்க்குமளவிற்கு வளர்ச்சி பெறாத காரணத்தினாலும் இவர்களது குடும்ப வாழ்க்கையானது ஆயுள் குறைந்ததாகக் காணப்படுகின்றது.
அதுமாத்திரமன்றி, இவ்வாறானவர்களுக்கு குழந்தைகள் கிடைக்கும் பட்சத்தில் அவற்றை பராமரித்து வளர்க்கின்ற உளப்பக்குவமும் மனவலிமையும் குறைவானதாகவே உள்ளது. இதனாலும் இவர்களுக்கு மத்தியில் நாளாந்தம் பல முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன.
17. போதைப்பாவனை:
இன்று அதிகரித்துவருகின்ற போதைப்;பாவனையானது அதற்கு அடிமையாகியுள்ளவர்களின் குடும்பத்தை முற்றாகப் பாதித்துள்ளது. “குடி குடியைக் கெடுக்கும்” என்பார்கள்.
அந்தவகையில், ஒரு குடும்பத்தின் அங்கத்தவர் போதைக்கு பழக்கமான அல்லது அடிமையான நிலை ஏற்ப்பட்டால், அந்தக் குடும்பமானது ஒழுக்கம், பண்பாடு, பொருளாதாரம், சமூகக் கௌரவம் மதிப்பு போன்ற விடயங்களில் வீழ்ச்சியையும் சீரழிவையும் அடைகின்றது.
இவ்வாறான குடும்பங்களின் பிள்ளைகளது எதிர்காலம் கேள்விக்குள்ளாகின்றது. அதுமாத்திரமன்றி, இங்கே தம்பதிகளுக்கிடையில் அவநம்பிக்கை, சந்தேகம் என்பன வலுப்பெற்று அடிக்கடி பிரச்சினைகளும் முரண்பாடுகளும் தோன்றி அந்தக் குடும்பமானது சிதைந்து சீரழிந்து செல்வதனை தவிர்க்க முடியாதுள்ளது.
18. சின்னத்திரைகளின் செல்வாக்கு:
இன்று குடும்ப வாழ்வினைப் பாதிப்படையச் செய்கின்ற ஒரு துறையாக சின்னத்திரைகளில் அரங்கேறும் சினிமா நாடகங்கள் காணப்படுகின்றன. பணமீட்டும் நோக்கங்களுக்காக இன்று பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இந்த நாடகங்கள் ஒரு குடும்பத்தின் நாளாந்த வாழ்க்கைப் போக்கினை திசைதிருப்பியுள்ளது.
அதாவது, இந்த சின்னத்திரைகளில் காண்பிக்கப்படும் ஒவ்வொரு நாடகமும் ஒரு குறிப்பிட்ட செய்தியினை சமூகத்தில் விதைப்பதனை நோக்காகக் கொண்டதாகும். இதில் வருகின்ற கதைகளையும் வகிபாகங்களையும் ஒப்பனைகளையும் தங்களது சொந்த குடும்ப வாழ்வியலில் அரங்கேற்ற, பிரயோகிக்க ஆணோ பெண்ணோ முற்ப்படுகின்ற போது அந்தக் குடும்பத்தில் பிரச்சினைகள் தோன்றுவதனை காணலாம்.
19. சமூக ஊடகங்களின் தாக்கம்:
தகவல் தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியினால் இன்று சமூக ஊடகங்களின் உருவாக்கமும் பரவலும் ஆதிக்கமும் தனிமனிதன் தொடக்கம் குடும்பம் மற்றும் சமூகத்தின் இயக்கப்பாட்டின் திசையை மாற்றும் அளவிற்கு இன்று ஆதிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது.
இணையத்தளங்கள், முகநூல், றுவிட்டர், வட்ஸ்அப், ஸ்கைப், யுரியு+ப் போன்ற சமூக ஊடகங்களின் காட்சிகளும், கருத்தியல்களும் அதன் செய்திகளும் இன்று குடும்பத்தின் இலக்கை அதிலுள்ள தனிமனிதர்களின் சிந்தனை, மனப்பாங்கு மற்றும் நடத்தை என்பனவற்றை மாற்றியமைக்கும் அளவிற்கு அதன் தாக்கம் காணப்படுகின்றது.
இந்த சமூக ஊடகங்களின் கருத்தியல்களை ஒரு குடும்பம் எதிர்மறையாக எடுத்துக் கொள்கின்ற போது அந்தக் குடும்பத்தின் வாழ்வொழுங்கானது பாதிப்படைகின்றது. அதுமாத்திரமன்றி, இன்று குடும்பத்திலுள்ள தனிமனிதர்கள் தங்களது அநேகமான நேரங்களை ஏனைய விவகாரங்களை விட இவ்வாறான சமூக ஊடகங்களில் செலவிடுவதாலும் அதற்கு அடிமைப்படுகின்ற நிலைமை தோன்றி குடும்பத்தின் இலக்கும் எதிர்பார்ப்பும் சீர்குலைகின்ற கவலையான நிலைமை இன்று தோன்றியுள்ளது.
20. குடும்ப முரண்பாட்டை கையாழும் திறனின்மை:
கணவன் மனைவிக்கிடையில் குடும்ப சூழலில் பல முரண்பாடுகள் பல சந்தர்ப்பங்களில் ஏற்படலாம். குறிப்பாக குழந்தை வளர்ப்பு, தாம்பத்திய உறவு, பொருளாதாரம், தொடர்பாடல், வீட்டு நிருவாகம், குடும்ப உறவுகளைக் கவனித்தல் போன்றனவற்றில் முரண்பாடுகள் ஏற்படலாம்.
இவ்வாறான முரண்பாட்டுச் சூழலில் நீயா அல்லது நானா என்ற தன்முனைப்பான போக்குடன் முரண்டுபட்டு நடந்தால் குடும்ப வாழ்வில் பிரச்சினைகள் தோன்றுவதை தவிர்க்கவே முடியாது.
உசாத்துணை:
1. றவூப் ஸெய்ன் (2011), “குடும்ப வாழ்வின் உளவியல்”;, அபிவிருத்தி கற்கைகள் மைய்யம் (சிடிஎஸ்), திஹாரிய.
2. கலாநிதி. ஸலாஹ் ஸாலிஹ் ராஷித்(2007), “ஆண் பெண் வேறுபாடுகள்” (பெயர்ப்பு), இஸ்லாமிய அய்வுகளுக்கான மிஷ்காத் நிறுவனம், இலங்கை.
3. எம்.எச்.எம்.நாளிர் (2016), “குடும்ப வாழ்வு சில வகுப்பறைப் பாடங்கள்”, ஈடிஎப், கல்கமுவ.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments