இளைஞர்கள் என்போர் முதிர்ச்சிக்கும் பிள்ளைப் பருவத்திற்கும் இடையிலான நிலைமாறும் பருவம். அதாவது முதிர்ச்சியின் அடையாளங்களும் பிள்ளைத்தனத்தின் மிடுக்கும் கலந்திருக்கும் பருவம். ஒரு மனிதனின் வாழ்வில் புயலடிக்கும் பருவம், உள்ளகக் குழப்பம் நிறைந்த பருவம் கட்டுக்கடங்காத பருவம் என இப்பருவத்தினை வர்ணிப்பர்.
ஒரு மனிதனின் இளமைப்பருவமானது 13 வயது தொடக்கம் சுமார் 30 வயது வரையான காலகட்டத்தை உள்ளடக்கி இருக்கும் என வரையறை செய்யலாம். இந்த வயது வரையறை தொடர்பில் உளவியலாளர்களிடையே பல அபிப்பிராய பேதங்கள் உண்டு. இருந்தாலும் இந்த இளமைப்பருவத்திற்குள் ஒரு மனிதனின் பதின்ம பருவமும் கட்டிளமைப்பருவமும் உள்ளடங்கி காணப்படும் என்பதில் உறுதியான நிலைப்பாட்டிற்குள் வர முடியும்.
இவர்களது முக்கியத்துவத்தைப் பொறுத்தவரையில், இளைஞர்கள் ஒரு சமூகத்தின் முதுகெலும்பாகும். அதுமாத்திரமன்றி இளைஞர்களை வளப்படுத்தவதிலும் வழிப்படுத்துவதிலுமே ஒரு சமூகத்தின் தலை விதி அமைந்துள்ளது. அதுமாத்திரமன்றி ஒரு சமுகத்தின் பலம் மற்றும் சக்தி இந்த இளைஞர்களே ஆகும் என்றால் அது மிகையாகாது.
ஒரு மனிதன் குழந்தைப்பருவம், பிள்ளைப்பருவம் என்பவற்றை கடந்து இளமைப்பருவத்தினை அடையும் போது அவனில் பல மாற்றங்கள் ஏற்படுவதை இயல்பாக அவதானிக்க முடியும். அந்தவகையில்,
இளமைப்பருவத்தில் ஏற்படும் பொதுவான மாற்றங்கள்:
• உடலியல் மாற்றங்கள்
• உளநிலை மாற்றங்கள்
• நடத்தை மாற்றங்கள்
• சமூக மாற்றங்கள்
1. இப்பருவத்திலேற்படும் உடலியல் மாற்றங்கள்
ஆண்களில்:
- தொண்டை – குரல்வளை மாறும்
- மீசை உருவாகும்
- தசை வளர்ச்சி ஏற்பட்டு இறுக்கமடையும்.
- மறைவான இடங்களில் உரோமம் வளரும்
பெண்களில்:
- உடல் பருமன் அதிகரிப்பு
- மார்பக வளர்ச்சி ஏற்படல்
- இடுப்பின் இடை அதிகரித்தல்
- மாதவிடாய் ஏற்படல்
2. இப்பருவத்திலேற்படும் உளநிலை மாற்றங்கள்
• தனது வகிபங்கு மற்றும் பாத்திரம் என்பனவற்றில் குழப்பமான நிலை ஏற்படல்.
• இலட்சியவாத சிந்தனை, புரட்சிகர சிந்தனை உருவாகுதல்.
• தனது அடையாளத்தை வெளிப்படுத்த முனைதல்.
• தன்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது தம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நினைப்பில் வாழ்தல்.
• பாலியல்சார் விடயங்களில் அதிக நாட்டம் கொள்ளல்.
• தங்கிவாழும் மனனிலை உருவாதல்
3. இப்பருவத்திலேற்படும் நடத்தை மாற்றங்கள்
• தனிமையில் விருப்பம்
• காதல் வயப்படல்
• தவறான தொடர்புகள்
• சொந்த அடையாளத்தைக் கைவிட்டு போலச் செய்தல் (சினமா நட்சத்திரம், விளையாட்டு வீரர்களைப் பின்பற்றுதல்)
• அடிக்கடி கோபப்படல்
• வாதாட்டம் செய்தல்
• சகபாடிகளுடன் கூட்டாகச் சேர்ந்து செயற்படல்
• சட்டம், ஒழுங்குகளை மீறுதல்
• ஏனையோரை தொந்தரவு செய்தல், கோபமூட்டல்
4. இப்பருவத்திலேற்படும் சமூகம் சார்ந்த மாற்றங்கள்
சமவயதுக் குழுக்களின் அழுத்தம் சுமார் 75வீதமாக இவர்களில் தாக்கம் செலுத்தும்.
சமூக செயற்பாடுகளில் அதிக நாட்டமும் ஈடுபாடும் காணப்படும்.
வன்முறைகளில் ஈடுபடல்
இளைஞர் பருவத்தினரைப் பாதிக்கும் காரணிகள்:
• உடல் உள மாற்றங்கள்
• குடும்பச் சூழல்
• பெற்றோர்-இளைஞர் உறவில் விரிசல்
• சமூகச் சூழல் - பொருளாதாரம், சமூக ஒதுக்கம், கலாசாரம்
• குழந்தைப்பருவ பிள்ளைப்பருவ அனுபவங்கள்
• கையடக்கத் தொலைபேசிப் பாவனை
• சமவயதுக் குழுக்களின் ஆதிக்கம்
• காதல் விவகாரம்
• திரைப்படங்கள்
• சமூக ஊடகங்களின் தாக்கம்
இளைஞர்கள் எதிர்கொள்ளும் இன்றைய சவால்கள்:
• கொள்ளளவை விருத்தி செய்யாமை
• தொழில் சந்தைக்கு தயாரில்லாமை
• குடும்ப மட்டத்திலும் சமுக மட்டத்திலும் முறையான வழிகாட்டலின்மை.
• போதைப் புழக்கம்
• உளவியல்சார் நெருக்கடிகள்
• ஆரோக்கியமான பொழுது போக்கு அம்சங்களின்மை.
இளைஞர்கள் கொள்ளளவை வளர்த்துக் கொள்வதற்கான ஆலோசனைகள்:
இளைஞர்கள் தங்களுடைய கொள்ளளவை வளர்ப்பதில் அதிக அக்கரை செலுத்துதல் வேண்டும். அப்போதுதான் அவர்களால் சமுகத்தினுடைய எதிர்பார்க்கைகளை பூர்த்தி செய்ய முடியும். அதற்கான சில வழிகாட்டல்களை இங்கு முன்வைக்கின்றேன்.
1. சுயமதிப்பீடு செய்தல்:
இளைஞர் ஒருவர் தன்னை முதலில் சுயமதிப்பீட்டிற்கு உள்ளாக்குதல் வேண்டும். அதற்காக ளுறுழுவு என்ற இலகுவான கருவியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ளுறுழுவு என்பது தனது பலம் (ளுவசநபெவா), தனது பலவீனம் (றுநயமநௌள), தனக்குள்ள வாய்ப்புக்கள் (ழுppழசவரnவைநைள), தனக்குள்ள அச்சுறுத்தல்கள் (வுhசநயவள) என்ற அடிப்படையில் வெளிப்படையாக ஆய்வு செய்ய வேண்டும்.
இந்த ளுறுழுவு ஆய்வானது ஒரு இளைஞனின் உடல், உள்ளம், ஆன்மா மற்றும் உணர்வுகள் என்ற பரப்பிலும் முன்னெடுக்கப்படல் வேண்டும். அதில் குறிப்பாக தனது பலவீனம் மற்றும் அச்சுறுத்தலான நிலைமைகள் இனங்காணப்படல் வேண்டும்.
உதாரணமாக:
உடல் - உடல் பலவீனம் அடைதல்
உள்ளம் - மன அழுத்தத்தை முகாமை செய்ய தெரியாமை
ஆன்மா - ஆன்மீகத்தில் நாட்டமின்மை
உணர்வுகள் - அதிகரித்த கோபம்
அத்துடன், தனக்குள்ள அறிவு மற்றும் அறிவின்மைகள், குறிப்பாக உலகம், வாழ்க்கை மற்றும் குடும்பம், மார்க்கம், தொழில் என்பனவற்றில் பிரயோசனமான அறிவு மற்றும் பிரயோசனமற்ற அறிவு என்பவற்றில் தனது கொள்ளளவை ஆய்வு செய்தல் வேண்டும். தனக்குள்ள திறன்கள் மற்றும் திறனின்மைகள் மற்றும் தனது மனப்பாங்கு அதில் நேரானது மறையானது மற்றும் இருப்பது வளர்த்துக் கொள்ள வேண்டியது என்ற அடிப்படையில் ஒரு மதிப்பீட்டினை மேற்கொள்ளல் வேண்டும்.
உதாரணமாக:
அறிவு - தொழில் கல்வி மற்றும் தொழில் சந்தை பற்றிய போதிய அறிவின்மை
திறன்கள் - தொடர்பாடல் மற்றும் விடயங்களை முன்வைக்கும் திறன் குறைவு
மனப்பாங்கு - பிறருக்கு உதவும் மனப்பாங்கு இன்மை
2. அவர்களது முன்னேற்றத்திற்கான திட்டமிடலை தயாரித்தல்:
ஒரு இளைஞன் தனது சுய மதிப்பீட்டின் மூலமாகப் பெற்றுக்கொண்ட உடல், உள்ளம், ஆன்மா மற்றும் உணர்வுகள் தொடர்பாக இனங்கண்ட பலவீனங்களையும் அச்சுறுத்தலான நிலைமைகளையும் இல்லாமல் செய்வதற்கான முறையான திட்டமிடலொன்றினை வகுத்தல் வேண்டும்.
உதாரணமாக:
உடல் - உடல் பலம் பெற உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளல்
உள்ளம் - மன அழுத்தத்தை முகாமை செய்ய பழகிக் கொள்ளல்
ஆன்மா - ஆன்மீகப் பயிற்சிகளில் ஈடுபடல்
உணர்வுகள் - கோபத்தை முகாமை செய்தல் அதற்கான பயிற்சிகளில் ஈடுபடல்
அதேபோன்று, அந்த இளைஞன் தனது அறிவு, திறன் மற்றும் மனப்பாங்கு என்பனவற்றில் ஆய்வு செய்து பெற்றுக்கொண்ட பலவீனமான முடிவினை இல்லாமல் செய்து, அவற்றை பலங்களாக மாற்றுவதற்கான திட்டங்களை வகுத்தல் வேண்டும்.
உதாரணமாக:
அறிவு - தொழில் கல்வி மற்றும் தொழில் சந்தை பற்றிய போதிய அறிவினை உரிய நிறுவனங்கள் மூலமாக அல்லது உத்தியோகத்தர்கள் மூலமாகப் பெற முனைதல்
திறன்கள் - தொடர்பாடல் மற்றும் விடயங்களை முன்வைக்கும் திறன்களை வளர்க்க பயிற்சி நெறி மற்றும் செயலமர்வுகளில் கலந்து கொள்ளல்
மனப்பாங்கு - ஒரு வாரத்திற்கு ஒரு தேவையுடையவருக்கு உதவிசெய்ய முயற்சித்தல்
இதனை இன்னும் வினைத்திறனுள்ளதாக மாற்ற வேண்டுமானால், தனது திட்டத்திற்கு துறைசார் உத்தியோகத்தர்களின் பங்களிப்பினையும் பெற்றுக்கொள்ள முடியும்.
3. திட்டத்தை அமுலாக்கம் செய்தல்:
ஒரு இளைஞன் தனது கொள்ளளவை விருத்தி செய்வதற்காக தான் வகுத்த திட்டங்களை நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் மற்றும் வருடாந்தம் என்ற அடிப்படையில் தனது வாழ்க்கையில் அமுல்படுத்துவதற்கான ஒரு கால அட்டவணையை தயாரித்து இலகுபடுத்தல் செய்து கொண்டு தனது பலங்களையும் தனக்குள்ள வாய்ப்புக்களையும் பயன்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
4. கண்காணித்தல் மற்றும் மீள்மதிப்பீடு செய்தல்
ஒரு இளைஞன் தனது கொள்ளளவை விருத்தி செய்வதற்காக தான் வகுத்த திட்டங்களை அமுலாக்கம் செய்யும்போது முறையான மற்றும் இலகுவான கண்காணித்தல் முறைமையை ஏற்படுத்திக் கொள்வதுடன், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருட முடிவில் மீள் மதிப்பீடு ஒன்றினை செய்து அதிலுள்ள பலவீனங்களை நிவர்த்திக்க பொருத்தமான செயற்றிட்டம் ஒன்றினை மீண்டும் தயாரித்து அமுல்படுத்தலாம்.
இவ்வாறு ஒரு இளைஞர் தனது கொள்ளளவை விருத்தி செய்தால், தனது வாழ்க்கையில் எதிர்கொள்கின்ற அனைத்து பிரச்சினைகளையும் சவால்களையும் மிகக் காத்திரமான முறையில் தாண்டுவதுடன், சமூகம் எதிர்பார்க்கின்ற வளமான இளைஞனாக மாறுவான் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...
0 Comments