மனித வாழ்வும் பொறுப்புணர்வும்

 

இறைவனால் இந்த உலகத்தில்; படைக்கப்பட்டிருக்கின்ற அற்புதமான படைப்பு மனிதனாகும். இவ்வாறான மனிதன் இந்த உலகத்தில் வாழவேண்டுமானால் அவன் அவ்வாழ்க்கையை பொறுப்புணர்வுடன் கொண்டுசெல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுவர். அந்தவகையில், மனித வாழ்வு மற்றும் பொறுப்புணர்வு என்ற சொல்லுகளுக்கு இடையில் மிகவும் இன்றியமையாத நெருக்கமான தொடர்பு இருக்கின்றது.

“பொறுப்புணர்வு” என்ற சொல்லானது பொறுப்பு + உணர்வு என்ற இரு சொற்கள் இணைந்தே பெறப்பட்ட ஒரு அர்த்தம் மிகுந்த சொல்லாகும். பொறுப்புணர்வு என்பது, ஒருவர் தனது அதிகாரம், கட்டுப்பாடு, முகாமைத்துவம் என்பனவற்றிற்கு கீழுள்ள விடயங்கள் தொடர்பாக பொறுப்புக்கூறுகின்ற (சநளிழளெiடிடந) அல்லது விடையளிக்கின்ற (யளெறநசயடிடந) அல்லது வகை சொல்லுகின்ற (யஉஉழரவெயடிடந) நிலைமையைக் குறிக்கும். இச்சொல்லானது மனிதனது உள்ளத்து உணர்வுகளுடன் தொடர்புபட்ட, மனித வாழ்க்கையை நெறிப்படுத்துவதில் உந்துதலளிக்கின்ற சக்தியாகக் காணப்படுகின்றது. 

அடுத்து, மனிதன் தனது வாழ்வில் பிரயோகிக்கின்ற கடமை மற்றும் பொறுப்புக்கள் என்பதற்கும் பொறுப்புணர்வு என்பதற்கும் இடையில் மிகப்பொருத்தமான உறவு காணப்படுகின்றது. ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் பிறந்து வளருகின்றபோது புத்திசுவாதீனமான நிலையை அடைகின்றான். இந்நிலையானது அவனது 07 அல்லது 10 வயதில் ஆரம்பிக்கின்றது. (இதில் சில மனிதர்கள் விதிவிலக்கான நிலையை அடைவர்) இவ்வாறான நிலையை மனிதன் அடைந்ததும், இவ்வுலகில் அவன் பல கடமைகளுக்கும் பொறுப்புக்களுக்கும் ஆளாக வேண்டியுள்ளது. இக்கடமையை அல்லது பொறுப்பினை சிறந்த முறையில் பூரணமாக செய்வதற்கு இந்த பொறுப்புணர்வு என்ற அம்சமானது வழிசமைக்கின்றது எனலாம். இதனை நாம் அவனது கடமையுணர்வு அல்லது பொறுப்புணர்வு என அழைப்பர்.

இப்பொறுப்புணர்வானது, மனிதனது வளர்ச்சிப் படிநிலைகளின்போது தானாகவே அவனது உள்ளத்தில் உருவெடுக்கின்ற ஒரு உணர்வு நிலையைக் குறிக்கும். அத்துடன், அவனது வயது வித்தியாச நிலைகளுக்கேற்ப்ப அவ்வுணர்வு கூடிக்குறைகின்ற தன்மையினையும் நாம் யதார்த்த பூர்வமாக அவதானிக்க முடியும். அதாவது, ஒரு மனிதன் சிறியவனாக இருக்கும்போது அவனில் ஏற்படுகின்ற பொறுப்புணர்விலும் பார்க்க, அவன் ஒரு இளைஞனாக மாறும் போது அவனில் ஏற்படுகின்ற பொறுப்புணர்வு அதிகமாகும் வித்தியாசமானதாகும்.

மேலும், காலத்திற்கு காலம் இவ்வுலகில் தோன்றி மனிதனை வழிநடாத்திய சமயங்கள் கூட இவ்வாறான பொறுப்புணர்வினை மனிதனுக்கு உணர்த்துவதற்கும் அதன்பால் மனித சமூகம் வாழ்வதற்கும் உரிய போதனைகளையும் அறநெறிகளையும் உபதேசித்துள்ளதனை நாம் வரலாற்றில் காண முடியும்.

அந்தவகையில், இந்த பொறுப்புணர்வு என்ற அம்சத்தை மனிதனின் தனிமனித, குடும்ப மற்றும் சமூக வாழ்வு நிலைகளுடன் தொடர்புபடுத்திப் பின்வருமாறு பார்க்க முடியும்.

தனிமனித வாழ்வும் பொறுப்புணர்வும்: 

மனிதனது உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட பொறுப்புணர்வு என்ற இச்சொல்லானது, இவ்வுலகத்தில் பிறந்து வளர்கின்ற ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கைக் காலத்தின்போது பல்வேறு வகையான பாத்திரங்களை (சுழடநள) ஏற்றுச் செயல்படுகின்ற நிலைகளுடன் தெடர்புபட்டதாகும்.

குழந்தையாக, பிள்ளையாக, வாலிபராக, வயோதிபத்திற்கு முந்திய பருவத்தினராக மற்றும் வயோதிபராக என தனது வாழ்க்கையின் வளர்ச்சிக்கட்டத்திலும், குடும்பத்தில் மகனாக, மகளாக, தகப்பனாக, தாயாக, கணவனாக மற்றும் மனைவியாக, சகோதரானாக சகோதரியாக எனவும் பாடசாலையில் மாணவராக ஆசிரியராக மற்றும் அதிபராக எனவும் சமூகத்தில் ஒரு அங்கத்தவராக, இளைஞனாக, மற்றும் நண்பராக, சமூக அபிவிருத்தி முன்னோடியாக, சீர்திருத்தவாதியாக எனவும் தேசத்தில் குடிமகனாக மற்றும் ஆட்சியாளனாக எனவும் பல்வேறு பாத்திரங்களை வகிக்க வேண்டியுள்ளது. இவ்வாறாக மனிதன் தனது வாழ்வுக்காலத்திற்குள் வகிக்கின்ற பாத்திரங்களை அடிக்கிக்கொண்டே போகலாம்.

மனிதன் எந்தளவு இவ்வுலகத்தில் பாத்திரங்களை ஏற்று செயற்படுகின்றானோ அந்தளவு அவன் பொறுப்புணர்வுடன் செயற்படுவது இன்றியமையாததாகும். அப்போதுதான் அவன் வகிக்கும் பாத்திரங்களை சிறந்த முறையில் இயக்கமுடியும். அதன் விளைவாக அவன் அதன் மூலம் எதிர்பார்க்கின்ற விளைவினையும் அடையமுடியும். இவ்வாறான பொறுப்புணர்வானது மனிதனது வளர்ச்சிப் படிநிலையில் பிள்ளைப்பருவத்திலிருந்து செயற்பட ஆரம்பமாகின்றது. அத்துடன், அம்மனிதன் ஆறறிவுள்ள முழுமையான மனிதனாக இருத்தல் வேண்டும். ஏனெனில் அவனது ஆறறிவுதான் பொறுப்புணர்வு என்ற உணர்வினை சிறப்பாகவும் தெளிவாகவும் உணரவைத்து, அவனது பாத்திரத்தை சிறப்பாக செய்வதற்கு வழிசமைக்கின்றது. 

அத்தோடு, இந்தப் பாத்திரங்களை ஏற்று வாழ்ந்தது தொடர்பாக அவன் இவ்வுலகத்திலுள்ளவர்களுக்கு பொறுப்புக்கூறுதல் வேண்டும். 

உதாரணமாக, ஒரு அரசாங்க ஊழியன் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் மற்றும் கடமைகள் தொடர்பாக, தனக்கு மேலுள்ள அதிகாரிகளுக்கும் திணைக்களத்திற்கும் அல்லது அமைச்சுக்கும் தனது பணிதொடர்பாக அதில் தானெடுத்த பாத்திரம் தொடர்பாக பொறுப்புக் கூறுதல் வேண்டும். அவனது பொறுப்புக் கூறலானது அவனது கடமையை சரியாகச் செய்தல் வேண்டுமென்ற பொறுப்புணர்வில்தான் தங்கியுள்ளது. இங்கு அவனளிக்கின்ற பொறுப்புக் கூறலில் இருந்துதான், அவனது பதவியுயர்வு அல்லது பதவியிறக்கம் தீர்மானிக்கப்படும்.

இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்க்கையில் தான் வகிக்கின்ற பாத்திரங்கள், மேற்கொள்கின்ற செயற்பாடுகள் அவன் கொண்டுள்ள கடமைப்பாடுகள் தொடர்பாக பொறுப்புணர்வுடன் செயற்படும் போதுதான், அவனது பணி திருப்திகரமானதாகவும் மேம்பட்டதாகவும் அமையும்.

அத்தோடு, தனது உலகவாழ்வின் முடிவிற்குப் பிறகு அவன் தனது உலக வாழ்வு தொடர்பாக முழுமையான பொறுப்புக் கூறலை மறுமையில் இறைவனுக்கு சொல்லியே ஆகவேண்டும். மறுமை வாழ்வில் ஒரு மனிதன் தனக்குத் தான் செய்த கடமைகள், பிற மனிதர்களுக்கு மற்றும் அவனைப்படைத்த இறைவனுக்கு செய்த கடமைகள் தொடர்பாக அவன் அவனது இறைவனிடத்தில் பொறுப்புக் கூறவேண்டிய நிலைமை உருவாகும். இதிலிருந்து எந்த மனிதனும் தப்பிக்கவே முடியாது. இது அவனது உலக வாழ்வில் அவன் இவ்விடயங்களில் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்ட அளவிலேயே தங்கியுள்ளது.

இப்பொறுப்புணர்வும் அதுதொடர்பான பொறுப்புக் கூறலும் புத்திசுவாதீனமற்ற மனிதர்களிடத்தில் எதிர்பார்க்கப்படமாட்டாது. ஏனெனில், அவர்கள் இயல்பிலேயே இவ்வுலகத்தில் எந்தவிதமான பொறுப்புக்களையும் ஏற்று நடப்பதற்கான தகுதி நிலைகளையும் அடிப்படையான அறிவினையும் இழந்து நிற்பர். மாறாக புத்திசுவாதீனம் உடைய மனிதர்கள் அனைவரும் தங்களது வாழ்க்கை தொடர்பாக பொறுப்புச் சொல்லியே ஆகவேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

குடும்ப வாழ்வும் பொறுப்புணர்வும்: 

குடும்ப வாழ்வைப் பொறுத்த வரையில் அங்கு தாய்-தகப்பன், மகன்-மகள், சகோதரன்-சகோதரி என்ற உறவு முறைகள் காணப்படும். அத்தோடு, இங்கு பெற்றோர்கள் தங்களது பிள்ளைகள் விடயத்திலும், பிள்ளைகள் தங்களது பெற்றோர்கள் விடயத்திலும் மேற்கொள்ள வேண்டிய பாரிய பொறுப்பும் கடமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறான கடமைகளும் பொறுப்புக்களும் அவர்களிடத்தில் காணப்படும் பொறுப்புணர்வின் அடிப்படையிலும் அளவிலேயுமே தங்கியுள்ளது. இங்கு பிள்ளைகள் தங்களது பெற்றோர்களது விவகாரத்திலும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளது விவகாரத்திலும் மிகப் பக்குவமான பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர். 

உதாரணமாக, ஒரு தந்தை தனது குடும்பத் தேவைகளை நிறைவு செய்வதற்கு உழைப்பதும், அதற்காக தனது இரத்தத்தை வியர்வையாக சிந்துவதும், தனது குடும்பத்தின் பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதும், தனது மனைவியினதும் தனது பிள்ளைகளினதும் தேவைகளையும் எதிர்பார்ப்பினையும் நிறைவேற்றுவதற்கு முயற்சிப்பதும் அதற்காக உழைப்பதும் தனது குடும்பம் இவ்வுலகில் எந்த நிலைமைகளிலும் தரம் குறைந்ததாக மாறக் கூடாது என்பதில் விழிப்பாக இருப்பதும் அவன் கொண்டிருக்கின்ற பொறுப்புணர்விலேயே தங்கியுள்ளது.

இவ்வாறாக அக்குடும்பத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தவரும் தங்களது குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் அதன் சுமுகமான போக்கிற்காகவும் உழைப்பதற்கு அவர்களது பொறுப்புணர்வானது அவர்களை முன்னோக்கி வழிநடத்தும் விசையாக செயற்படுகின்றது.

மாறாக, பொறுப்புணர்வுடன் நடப்பதில் அக்குடும்பத்தின் அங்கத்தினர் தவறிழைக்கின்றபோது அல்லது பொறுப்பற்றவிதத்தில் நடக்கமுனைகின்ற போது, அக்குடும்பமானது அதனது இயல்பு நிலையைக் கடந்து, சமநிலை குழம்பி, நெறிபிறழ்ந்து, சீரழிவை நோக்கி செல்வதனை தவிர்க்கமுடியாது.

அத்தோடு, ஒரு சமூகத்தின் அங்கமாக இருக்கின்ற குடும்பங்கள் அதன் உறுப்பினர்கள் தான் சார்ந்துள்ள சமூகத்தினுடைய முன்னேற்றத்திற்கான வழிவகைகளையும் அதற்கான பங்களிப்பினையும் மேற்கொள்வதற்கும் இப்பொறுப்புணர்வானது வழிசமைக்கின்றது. 

சமூகமும், பொறுப்புணர்வும்: 

ஒரு சமூகத்தை பொறுத்தமட்டில் அதன் அங்கமான தனிமனிதர்களையும் அதிலுள்ள குடும்பங்களையும் சிறப்பாக வழிநடத்துவதும் அவர்களுடைய இயல்பான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சாதனங்களையும் வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுப்பதானது, அச்சமூகத்தினுடைய கடப்பாடும் பொறுப்புமாகும்.  இது அச்சமூகம் கொண்டுள்ள பொறுப்புணர்வின் அடிப்படையிலேயே தங்கியுள்ளது. இதனை நாம் சமூகப் பொறுப்புணர்வு (ளுழஉயைட சுநளிழளெiடிடைவைல) எனவும் அழைப்பர்.

மேலும், ஒரு சமூகத்தில் வாழ்கின்ற அனாதரவானவர்கள், நிர்க்கதி நிலையை அடைந்தவர்கள், நழிவுற்றவர்கள், விசேட தேவையுடையவர்கள், அனாதைகள், விதவைகள் மற்றும் முதியோர்கள் ஆகியோர்கள் விடயத்தில் அவர்களது நல்வாழ்வு விடயத்தில் ஒரு சமூகம் பாரபட்சமான போக்கினையும் அக்கரையற்ற நிலைப்பாட்டினையும் கொண்டிருக்குமாயின், அச்சமூகம் அவர்கள் விடயத்திலான தனது பொறுப்பினையும் கடமையினையும் சரியாகவும் முறையாகவும் நிறைவேற்றவில்லை. ஏனெனில், அச்சமூகம் இவ்விடயத்தில் தனக்குரிய பொறுப்புணர்வினை இழந்துள்ளது என்பதே அர்த்தமாகும். 

இவ்வாறான நிலைமைகள் ஒரு சமூகத்தில் உருவாகின்றபோது, ஏனைய சமூகங்கள் அவர்களுக்கு உதவுவதற்காக குறித்த சமூகத்தினுடைய கட்டுக்கோப்பு மற்றும் விழுமியங்கள் என்பனவற்றை பொருட்படுத்தாது உதவுவதற்கு முன்வருகின்ற நிலைமைகள் தோன்றுவதனை அவதானிக்க முடியும்.

எனவே, மனிதவாழ்வைப் பொறுத்தவரையில் இப்பொறுப்புணர்வு என்ற அம்சமானது ஒரு இயக்க சக்தியாகத் தொழிற்படுகின்றது. அத்தோடு, தனிமனிதன், குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்பன பொறுப்புணர்வு அடிப்படையில் செயற்படாவிட்டால் அல்லது வழிநடாத்தப்படாவிட்டால் இவ்வுலகின் இயக்க நிலையானது குழப்பமடையும் என்பதில் ஐய்யமில்லை.

குறிப்பாக, பொறுப்புள்ள பதவிநிலைகளில் இருந்து கொண்டு, இவ்வுலகையும் அதிலுள்ள மக்களையும் பொறுப்புணர்வுடன் நிர்வகிக்கத் தவறியதனால், இவ்வுலக வரலாற்றில் கடந்த காலத்திலும், தற்காலத்திலும் பல நாடுகளும் அதிலுள்ள மக்களும் பல்வேறு அழிவுநிலைகளுக்கு உள்ளாகி மண்ணோடு மண்ணாகிய நிலைமையையும் உணரமுடியும்.

அந்தவகையில், ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வரம்பிற்குள் நின்று தனது சக்திக்குட்பட்ட வகையில் இவ்வுலகில் தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் சிறந்த பொறுப்புணர்வுடன் மேற்கொண்டால் இவ்வுலகம் சிறக்கும் வளம்பெறும் என்பது திண்ணம்.

இக் கட்டுரை தொடர்பான உங்கள் கருத்துக்களை இங்கு பதிவு செய்க...

0 Comments